இயற்கையின் வயாகரா முருங்கைகாயின் மருத்துவ பலன்கள்

Cold Fever Diabetes Mellitus Eye Problems Drum Stick Kidney Disease
By Fathima Apr 30, 2022 02:30 PM GMT
Report

முன்பெல்லாம் மிக சாதாரணமாக பெரும்பாலான வீடுகளில் தென்படும் மரம் முருங்கை.

ஆனால் இன்றைய நவீன உலகில் நகரங்களில் முருங்கை மரத்தை பார்ப்பதே அரிதாகிவிட்டது, முருங்கை மரத்தை மருத்துவ பொக்கிஷம் என்றே குறிப்பிடலாம்.

காரணம், இதன் அனைத்து பாகங்களும் மருத்துவ குணங்கள் கொண்டவை, இதன் காய் மற்றும் இலைகளில் வைட்டமின் சி அதிகமாக இருக்கிறது.

குறிப்பாக முருங்கை காயில் விட்டமின்கள் ஏ, பி1(தயாமின்), பி2(ரிபோஃப்னோவின்), பி3(நியாசின்), பி6(பைரிடாக்ஸின்), ஃபோலேட்டுகள் ஆகியவை காணப்படுகின்றன.

இயற்கையின் வயாகரா முருங்கைகாயின் மருத்துவ பலன்கள் | Drumstick Benefits In Tamil

இதில் கால்சியம், இரும்புச்சத்து, மாங்கனீசு, மெக்னீசியம், பாஸ்பரஸ், செலீனியம், துத்தநாகம், பொட்டாசியம், குறைந்த எரிசக்தி, அதிகளவு நார்சத்து, கார்போஹைட்ரேட், புரதச்சத்து, அமினோ அமிலங்கள் மற்றும் தாது உப்புக்கள் நிறைந்திருக்கின்றன.

சித்த மருத்துவப்படி, முருங்கை, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரைநோய், சோர்வு, நரம்புத் தளர்ச்சி வியாதிகளுக்கு மருந்தாகிறது.

யாரெல்லாம் சாப்பிடலாம்?

மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள், மூலநோயால் பாதிக்கப்பட்டவர்கள், சளி பிரச்சனை உள்ளவர்கள், ரத்தசோகை, வயிற்றில் புழு பிரச்சனை உள்ளவர்கள், கணையம், கல்லீரலில் வீக்கம் உள்ளவர்கள் முருங்கைக்காயை சாப்பிட்டால் நல்ல நிவாரணம் கிடைக்கும். 

கூந்தல் உதிர்வை தடுத்து வளர்ச்சியை அதிகரிக்கணுமா? 

சளித்தொல்லை தீரும்

இயற்கையின் வயாகரா முருங்கைகாயின் மருத்துவ பலன்கள் | Drumstick Benefits In Tamil

தொண்டை வறட்சி, சளி போன்ற பிரச்சனையால் அவதிப்படும் நபர்கள், முருங்கை சூப் தயாரித்து அருந்தினால் உடனடி பலன் கிடைக்கும், முருங்கை கீரையையும் அடிக்கடி பொரியல் செய்து சாப்பிட்டு வர ஆஸ்துமா நோய்கள் நெருங்காது.

முருங்கை காயை நீரில் போட்டு ஆவி பிடித்து வந்தாலும் நுரையீரல் தொடர்பான நோய்கள் குணமாகும்.

நிமோனியா என்பது என்ன? வீட்டிலேயே குணப்படுத்த முடியுமா? 

எலும்புகள் வலுப்படும்

இயற்கையின் வயாகரா முருங்கைகாயின் மருத்துவ பலன்கள் | Drumstick Benefits In Tamil

முருங்கை காயில் கால்சியம் மற்றும் இரும்பு சத்து அதிகம் நிறைந்துள்ளது, பாலை விட நான்கு மடங்கு கால்சியம் முருங்கைகாயில் அதிகம் உள்ளது.

இதனால் முருங்கைகாயை தொடர்ந்து சாப்பிட்டு வர உடலில் உள்ள எலும்புகள் வலுவாகும். 

இந்த விதையை இரவில் ஊற வைத்து மறுநாள் காலையில் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்! 

ஆண்மைப்பெருகும்

ஆண்கள் வலுவுடன் இருக்க அசைவ உணவுகளை பரிந்துரைப்பார்கள், சைவத்தில் முருங்கையை அடித்துக்கொள்ள எதுவுமில்லை, முருங்கையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டாலே விந்தணுக்கள் பலம் பெரும்.

தாம்பத்திய குறைபாடு முதல் எடை குறைப்பு வரை! கடுக்காய் இருக்க பயம் ஏன்? 

சிறுநீரக பிரச்சனைகளுக்கு தீர்வு

இயற்கையின் வயாகரா முருங்கைகாயின் மருத்துவ பலன்கள் | Drumstick Benefits In Tamil

சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் மற்றும் அரிப்புக்கு முருங்கை காயே தீர்வு, வாரத்தில் குறைந்தது இரண்டு முறை முருங்கைக்காயை உணவாக எடுத்துகொண்டால் ரத்தமும், சிறுநீரும் சுத்தம் அடையும்.

குழந்தைகள் முருங்கைக்காய் விதைகளை சாப்பிட்டால் மலக்குடல்களில் இருக்கும் கிருமி பூச்சிகள் வெளியேறும்.

ஓம விதைகளை அளவுக்கு மீறி எடுத்து கொண்டால் என்ன ஆகும் தெரியுமா? 

ரத்த சர்க்கரை அளவு சீராகும்

இயற்கையின் வயாகரா முருங்கைகாயின் மருத்துவ பலன்கள் | Drumstick Benefits In Tamil

சர்க்கரை நோயாளிகளின் ரத்த சர்க்கரை அளவை சீராக்குவதில் முருங்கை முக்கிய பங்காற்றுகிறது, அதாவது கணையத்தை நன்றாக செயல்பட வைப்பதால் சர்க்கரை அளவு சரியாக இருக்கும்.

எனவே சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும் நபர்கள் தாராளமாக முருங்கை காயை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்தும் வெந்தயம்

செரிமானத்தை மேம்படுத்தும்

இயற்கையின் வயாகரா முருங்கைகாயின் மருத்துவ பலன்கள் | Drumstick Benefits In Tamil

விட்டமின் பி அதிகம் நிறைந்துள்ள முருங்கை காயை சாப்பிட்டு வர செரிமானம் மேம்படும், ஏனெனில் உணவை உடைத்து செரிமானத்தை எளிதாக்க விட்டமின் பி சத்துக்கள் அவசியம்.

இதுதவிர கரையும் நார்ச்சத்துக்கள் முருங்கை காயில் இருப்பதால் செரிமானம் எளிதாக நடைபெற்று, சத்துக்கள் உடலில் எளிதில் கிரகிக்கப்படும்.

படுக்கும் போது நல்லெண்ணெய்யை முகத்தில் தடவுங்க! பேரழகியாக ஜொலிப்பீர்கள் 

ரத்தத்தை சுத்தப்படுத்தும்

இயற்கையின் வயாகரா முருங்கைகாயின் மருத்துவ பலன்கள் | Drumstick Benefits In Tamil

ரத்தத்தை சுத்தப்படுத்தும் ஆன்டி பயாடிக் பண்புகள் முருங்கை காயில் காணப்படுகின்றன, இதனால் ரத்தத்தில் உள்ள நச்சுக்கள் எளிதில் நீக்கப்படும்.

வாரத்தில் இரண்டு முறையாவது முருங்கை காயை சாப்பிட்டு வர ரத்தம் சுத்தமாகும், ரத்த ஓட்டமும் சீராக இருக்கும்.

குறிப்பாக உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் சக்தி முருங்கை காய்க்கு உண்டு.

கொத்தமல்லியின் அசரவைக்கும் நன்மைகள் 

கண்நோய்களை குணப்படுத்தும்

இயற்கையின் வயாகரா முருங்கைகாயின் மருத்துவ பலன்கள் | Drumstick Benefits In Tamil

முருங்கை காயில் நிறைந்துள்ள ஆன்டி ஆக்சிடன்டுகள் கண் தொடர்பான நோய்களை சரிசெய்கிறது, கண் புரை, கண் எரிச்சல் போன்ற நோய்கள் வராமலும் தடுக்கிறது.

குறிப்பாக பருவகாலநிலை மாற்றம் ஏற்படும் போது முருங்கை காயை எடுத்துக் கொள்ளலாம், உடலின் வெப்பநிலையை குறைக்கும் தன்மை கொண்டது முருங்கை.

கண் பார்வை அதிகரித்து தலைவலி வருவதை தடுக்கும் எளிய உணவுகள்

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US