ஆபாசம் படம் பார்ப்பவர்களை தேடிப்போய் பணம் பறிக்கும் கும்பல்
இந்தியாவின் ஆபாசம் படம் பார்ப்பவர்களது இணையதள முகவரியை வைத்து அவர்களை மிரட்டி கும்பலொன்று பணம் பறித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆபாச படங்கள்
தற்போது இந்தியாவில் தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களிலுள்ள சிறார்களின் ஆபாச படங்கள் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் வீடியோவை பார்ப்பவர்களது இணையதள முகவரியையும் சிபிஐயும் முடக்கி, மக்களிடம் பணம் கொள்ளையடிக்கும் கும்பல் உருவாகியுள்ளதாக போலிஸார் தெரிவித்துள்ளனர்.

போலியான அழைப்பு
இந்த கும்பலிலுள்ளவர்கள் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு “நீங்கள் ஆபாச படம் பார்த்துள்ளீர்கள் உங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று போலீஸார் போல் பேசி பணம் கேட்டு மிறட்டி வருகின்றனர்.
இதனால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் எனவும் போலிஸார் இவ்வாறு எந்தவிதமான அழைப்புக்களையும் செய்யவில்லை எனவும் மக்களிடம் தெரிவித்துள்ளது.
இது போன்ற போலியான அழைப்புகளுக்கு பணம் செலுத்த அவசியம் இல்லை எனவும் தெரிவித்துள்ளது.
