வாழைப்பழ மில்க் ஷேக் செய்து பார்க்கலாம் வாங்க...
பொதுவாகவே மில்க் ஷேக் என்பவை உடலுக்கு நல்ல புத்துணர்ச்சியை அளிக்கக்கூடியது.
அதுவும் குழந்தைகளுக்கு இவற்றை செய்து கொடுத்தால் நல்லது.
தேவையான பொருட்கள்
வாழைப்பழம் - 2
பேரீச்சம் பழம் - 10
முழு கொழுப்புள்ள பால் - 1/2 லீட்டர்
சர்க்கரை - 2 தேக்கரண்டி
பிஸ்தா - சிறிதளவு
பாதாம் - 20
வெணிலா எசன்ஸ் - 1/4 தேக்கரண்டி
ஐஸ் கட்டிகள்
குங்குமப் பூ - தேவையான அளவு
செய்முறை
முதலில் வாழைப்பழத்தை தோலை எடுத்துவிட்டு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
பின்னர் பேரீச்சம் பழத்தின் விதையை எடுத்துக் கொள்ளவும். பாதாமை ஊறவைத்து, பாதாம் மற்றும் பிஸ்தாவை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
அதன்பின்னர் வாழைப்பழம், பாதாம், சர்க்கரை, வெணிலா எசன்ஸ், ஐஸ் கட்டி, பால் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
பின்னர் கண்ணாடி கப்பில் ஊற்றி அதன் மேல் நறுக்கிய பிஸ்தா, பாதாம் மற்றும் குங்குமப்பூவை தூவி அலங்கரிக்கவும்.