அன்றாட உணவில் வறுத்த பூண்டு எடுத்துக்கோங்க! கெட்ட கொழுப்பு காணாமல் போயிடும்
மசாலா மணம் மிக்க பூண்டில் எண்ணிலடங்காக மருத்துவ குணங்கள் நிறைந்திருப்பது என்பது நாம் அனைவரும் அறிந்த தகவலே.
பல நூற்றாண்டுகளாக மருத்துவத்திலும் சமையலறையிலும் பூண்டை பயன்படுத்தி வருகிறோம்.
அஞ்சறை பெட்டியில் அடங்கியிருக்கும் தனித்துவமான பூண்டில் அலிசின், அலைல் ப்ரொபைல் டைசல்ஃபேட், சிஸ்டீன் சல்ஃபாக்ஸைடு போன்றவை உள்ளடங்கியிருக்கிறது.
பூண்டை பச்சையாக சாப்பிடுவதை விட வறுத்து சாப்பிடுவது இன்னும் நன்மையே தரும்.
அந்தவகையில் அன்றாட உணவில் வறுத்த பூண்டு சேர்த்துக்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
தினமும் வறுத்த பூண்டு
தினமும் 6 வறுத்த பூண்டு சாப்பிடுவதால் வாய பிரச்சனைகள் வராது. இதை அன்றாட உணவில் அதிகமாகவே சேர்த்துக் கொள்ளலாம்.
தினமும் வறுத்த பூண்டு சாப்பிடுவதால் இரத்த அழுத்தம் உயர் கொலஸ்ட்ரால் இதய நோய், மாரடைப்பு, பெரும்தமனி அடைப்பு போன்ற பிரச்சனைகளை தடுத்து காத்துக் கொள்கிறது மற்றும் இரத்த நாளங்களை ரிலாக்ஸ் செய்யும்.
பூண்டு உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து ஆரோக்கியத்துடன் வைத்துக்கொள்கிறது. பூண்டு ஆரோக்கிய உணவில் சிறந்து விளங்குகிறது.
வறுத்த பூண்டு சாப்பிட்டால் உடலில் உள்ள ப்ரி-ராடிக்கல்களை எதிர்த்து போராடி உடலில் ஏற்படும் புற்று நோய் செல்களை அழிக்க பயன்படுகிறது. கொலஸ்ட்ராலின் அளவை சீராக வைத்துக்கொள்கிறது. எலும்புகளை பலமாக வைத்துக்கொள்கிறது.
பூண்டு மருத்துவக் குணத்தால் உடலின் சோர்வை நீக்குகிறது. உடலில் உள்ள செல்களின் வாழ்நாளை நீடிக்கச்செய்கிறது.