மறந்தும் கூட இந்த பாத்திரங்களில் உணவு சமைக்காதீங்க! உயிருக்கே ஆபத்து
நாம் சாப்பிடுவதற்காக சமைக்கும் அந்த செயற்பாடு ஒரு கலை.
இந்த கலை தெரிந்து கொண்டால் மாத்திரமே நாவிற்கு சுவையான சாப்பாடுகளை சாப்பிட முடியும்.
மேலும் சமைக்கும் போது நாம் அதில் சிறுசிறு நுட்பங்களை தெரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் சாப்பாடு சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
அந்த வகையில் சில வீடுகளில் அலுமினிய பாத்திரங்களை இந்த சாப்பாட்டை சமைக்கக்கூடாது என கூறுவார்கள். இது தொடர்பில் தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
அலுமினிய பாத்திரங்களில் செய்ய கூடாத உணவுகள்
1. மீன் வகை சாப்பாடுகள்
மீன் பொதுவாக நாம் வீடுகளில் மீன் சமைக்கும் போது மண் பாத்திரங்களை தான் பயன்படுத்துவார்கள். இவ்வாறு பயன்படுத்தும் போது இது குறித்து கேட்டால் அவர்களுக்கு சரியான விளக்கம் கொடுக்க மாட்டார்கள். அந்த வகையில் மீன் வகைகளை அலுமினிய பாத்திரங்களில் சமைக்க கூடாது.
இதற்கு முக்கிய காரணம் என்ன தெரியுமா? மீன்களில் இருக்கும் சதைப்பகுதி மிகுந்த மெல்லிசாக காணப்படும். அலுமினிய பாத்திரங்களில் சமைக்கும் போது சட்டியில் அடியில் ஒட்டி உடைவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. இந்த காரணத்திற்காக மட்டும் தான் சமைக்க மாட்டார்கள்.
Image - Make
2. ஊறுகாய் வகைகள்
நாம் ஊறுக்காய் போடுவதற்காக பயன்படுத்தும் எலுமிச்சை, மாங்காய் போன்றவை அதிகமான உப்பு தன்மை கொண்டது. இதிலிருக்கும் அந்த புளிப்பு சுவையில் அமிலம் இருக்கிறது. இதனால் அலுமினிய பாத்திரங்களில் சமைக்கக்கூடாது. ஏனென்றால் இந்த பாத்திரங்களிலும் அமிலம் இருக்கிறது.
மற்றும் இது போன்ற உணவுகள் அலுமினிய பாத்திரங்களில் தயாரிக்கும் போது பாத்திரங்களில் இருக்கும் நிறம் மாறும். மண்சட்டியில் தயாரிக்கும் போது அமிலம் + காரம் இரண்டு தாக்கம் புரிந்து சுவையிலும், ஆரோக்கியத்திலும் எந்தவிதமான தாக்கத்தையும் தராது.
Image - Vikatan
3. இனிப்பு வகைகள்
பண்டிகைகள் வந்து விட்டால் இனிப்பு வகைகளுக்கு பஞ்சம் இருக்காது. இதனால் அதிகமானவர்கள் இனிப்பு வகைகளை பெரிய பெரிய அலுமினிய பாத்திரங்களில் செய்வார்கள்.
இவ்வாறு செய்வதால் அதிலிருந்து வரும் சுவை குறைவாக இருக்கும். மேலும் அலுமினிய பாத்திரங்களில் சமைக்கும் போது சுவையில் மாறுதல் ஏற்பட்டு லேசாக அலுமினிய வாசம் வரும் இது நாவிற்கும் உடலுக்கும் அவ்வளவு நல்லது அல்ல.
Image - LifeStyle.flt