பசி எடுப்பதில் பிரச்சினையா? அப்போது இதுல ஒரு ஸ்பூன் சாப்பிட்டால் போதும்!
பொதுவாக குழந்தைகளுக்கு உடம்பு சரியில்லாமல் இருக்கும் போது பசி ஏற்படாது.
குழந்தைகளின் வயிற்றுப்பகுதியில் மிகவும் சூடாக இருக்கும் போது மலச்சிக்கல் அல்லது செரிமாண பிரச்சினை ஏற்படும். இது போன்ற சூழ்நிலைகளில் குழந்தைகளுக்கு உணவளிப்பது மிகவும் சிரமமாக இருக்கும்.
இதன்போது மருத்துவ ஆலோசனைகளை நாடுவதை விட வீட்டில் இருக்கும் சில மூலிகை பதார்த்தங்களை கொண்டு ரசம், துவையல், சூப் போன்றவற்றை செய்துக் கொடுப்பதன் நிரந்தர தீர்வைப் பெற முடியும்.
அந்த வகையில் பசி ஏற்படாமல் மந்தமாக இருக்கும் போது இஞ்சி ஊறுகாய் செய்துக் கொடுத்தால் நிரந்த தீர்வைப் பெற முடியும்.
இதன்படி, இஞ்சி ஊறுகாய் தயாரிப்பது எவ்வாறு என்பது குறித்து தெரிந்துக் கொள்வோம்.
தேவையான பொருட்கள்
இஞ்சி – கால் கிலோ
புளி – எலுமிச்சை பழ அளவு
பச்சை மிளகாய் – ஒன்று
வெல்லம் – அரை கப்
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை
கடுகு – அரை தேக்கரண்டி
பெருங்காயம் – ஒரு தேக்கரண்டி
நல்லெண்ணெய் – தேவையான அளவு
உப்பு – சுவைக்கு ஏற்ப
image - Alamy
செய்முறை
முதலில் புளியை எடுத்து சுமார் 1 மணித்தியாலத்திற்கு முன்னர் குளிர்ந்த நீரில் ஊற வைத்து கெட்டியாக கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் இஞ்சித்தூண்டுகளை கழுவி, தோல் சீவி நீக்கி, சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
இதனை தொடர்ந்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் இருக்கும் போது கடுகு, பெருங்காயத்தூள் , கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
அதனுடன் கீறிய பச்சை மிளகாய் மற்றும் நறுக்கிய இஞ்சி ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளரி கொள்ளுங்கள்.
மிதமாக சூட்டில் வைத்து விட்டு அந்த கலவையில் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து, புளிக் கரைசல் ஆகியவற்றை சேர்த்து எண்ணெய்யும் கலவையையும் பிரிந்து வரும் வரை அடுப்பில் வைத்திருக்க வேண்டும்.
10 நிமிடங்களின் பின்னர் சூடு ஆறியதும் மிக்ஸில் போட்டு மைப்போல் அரைத்து எடுத்தால் இஞ்சி ஊறுக்காய் தயார்!
முக்கிய குறிப்பு
துவையல், சம்பல் ஆகியவற்றை அம்மியில் அரைப்பதே சிறந்தது. சுவையும் இரட்டிப்பாக இருக்கும்.