அலுமினியம், ஸ்டீல் பாத்திரங்களில் உள்ள அடிபிடித்த கறைகளை எளிதில் அகற்ற சூப்பர் டிப்ஸ்..!
சில நேரங்களில் கிட்சனில் வைத்த குழம்பையோ, சாதத்தையோ மறந்து வேறு வேலை செய்து கொண்டிருகும் சமயத்தில் கருகிய வாடை வௌம்.
ஓடிப்போய் பார்த்தால் செய்தது அத்தனையும் வீணாகி அடிபிடித்திருக்கும்.
வீணாகிய உணவைக் கூட கொட்டி விடலாம். ஆனால் அதில் படிந்திருக்கும் அடிபிடித்த கறைகளை தேய்ப்பதுதான் மிகப்பெரிய சவால்.
இப்படியான அனுபவம் உங்களுக்கு அடிக்கடி நிகழும் எனில் உங்களுக்கான டிப்ஸ்தான் இது...
தேவையான பொருட்கள்
1வது டிப்ஸ்
- பேக்கிங் சோடா
- எலுமிச்சை
- போரக்ஸ் பவுடர்
- லிக்விட் டிஷ் வாஷ்
செய்முறை
அடிபிடித்த பாத்திரத்தின் அளவுக்கு ஏற்றவாறு தண்ணீர் ஊற்றி அடுப்பின் வையுங்கள். பின் தண்ணீரின் அளவுக்கு ஏற்ப மற்ற பொருட்களையும் சேருங்கள்.
அதை கொதிக்க வையுங்கள். இரண்டு கொதி வந்ததும் அடுப்பை அணைத்துவிட்டு அடிபிடித்த பாத்திரத்தில் இந்த தண்ணீரை ஊற்றுங்கள். பின் 30 நிமிடங்கள் ஊற வையுங்கள். பின் எப்போதும் போல் கம்பி நார் கொண்டு தேய்க்க அடிபிடித்த கறை நீங்கிவிடும்.
2 வது டிப்ஸ்
தேவையான பொருட்கள்
- பேக்கிங் சோடா
- வினிகர்
- லிக்விட் டிஷ் வாஷ்
செய்முறை
வினிகர் மற்றும் லிக்விடை ஒரு கிண்ணத்தில் ஊற்றி கலந்துகொள்ளுங்கள். பின் பேக்கிங் சோடாவும் சேர்த்து கலக்குகள்.
தற்போது அடிபிடித்த பாத்திரத்தை சுற்றிலும் இந்த லிக்விடை தேய்த்துவிடுங்கள். அதை அப்படியே 20 நிமிடங்கள் ஊற வையுங்கள்.
20 நிமிடங்களுக்குப் பின் எப்போதும்போல் கம்பி நார் கொண்டு தேய்க்க கறை நீங்கிவிடும்.