கோடைகாலத்தில் உடல் எடையை ஈஸியா குறைக்கலாம்?
கோடை காலங்களில் உடல் எடையைக் குறைப்பதற்கு உதவியாக இருக்கும் உணவுகளைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
உடல் எடை
இன்றைய காலத்தில் உடல் எடையகை் குறைப்பதற்கு பலரும் சிரமப்பட்டு வரும் நிலையில், பெரும்பாலான நபர்களின் முக்கிய பிரச்சனையாக இருந்து வருகின்றது.
உடல் எடையைக் குறைப்பதற்கு டயட் என்ற பெயரில் உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி, சிலவகையான மருந்துகள் இவைகளை எடுக்கின்றனர்.
அந்த வகையில் உடல் எடையைக் குறைப்பதற்கு கோடை காலமானது சாதகமான சூழ்நிலையாக இருப்பதறாக நிபுணர்கள் கூறும் நிலையில், இத்தருணத்தில் எந்தெந்த உணவுகளை எடுத்துக் கொண்டால் உடல் எடை குறையும் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
உடல் எடையைக் குறைக்கும் உணவுகள்
அனைத்து மக்களால் விரும்பப்படும் தயிரில் புரதச்சத்து மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள நிலையில், இவை உடல் எடையைக் குறைப்பதற்கு உதவி செய்யுமாம்.

நீர்ச்சத்து நிறைந்த தர்பூசணி கோடை காலத்திற்கு ஏற்ற பழமாகவும், உடலில் நீர்ச்சத்தை பராமரிக்கவும் உதவுகின்றது. இவை கலோரிகளைக் குறைத்து கொழுப்பினைக் கரைக்க உதவி செய்கின்றது. இதே போன்று வெள்ளரிக்காய், சிட்ரஸ் பழங்களும் உடல் எடையை குறைக்க உதவுகின்றது.

நறுமணப்பொருட்களில் ஒன்றாக இருக்கும் இலவங்கப்பட்டை சமையலறையில் பயன்படுத்தப்படும் அத்தியாவசிய பொருட்களில் ஒன்றாக இருக்கின்றது. இதில் சின்னமால்டிஹைட் என்ற மூலக்கூடு எடையைக் குறைக்க உதவுவதுடன், கொழுப்பை எரிக்கவும் செய்கின்றது.

இலைக்காய்கறிகள் கொழுப்பினை எரிக்கும் தன்னை கொண்டுள்ளது. மேலும் இதில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் செரிமான பிரச்சனைக்கும் தீர்வு அளிக்கின்றது. இதே போன்று ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த பெர்ரி பழங்களும் எடையைக் குறைக்க உதவுகின்றது.

இளநீர் கோடை காலத்திற்கு சிறந்த பானமாக இருக்கின்றது. இவை உடல் வறட்சியை தடுப்பதுடன், சோர்வையும் குறைக்கின்றது. வியர்வை மூலமாக வெளியாகும் தாதுக்களை ஈடுசெய்யும் சிறந்த பானமாக இருக்கின்றது.

வெயில் காலத்தில் அனைவரும் குடிக்கும் ஒரு பானமென்றால் அது மோர்தான். குறைந்த கொழுப்பு மற்றும் அதிக புரோபயாடிக்குகளைக் கொண்ட மோர், உடம்பை குளிர்ச்சியாகவும், நீரேற்றமாகவும் வைத்திருக்க உதவுவதுடன், உடல் எடையையும் குறைக்கின்றது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |