மொறு மொறு சுவையில் உளுந்து வடை வேண்டுமா? இப்படி செய்ய உளுந்தே தேவையில்லை!

Healthy Food Recipes
By Vinoja Apr 11, 2026 04:30 PM GMT
Report

பொதுவாகவே பண்டிகை காலங்களில்  வடை பாயாசத்துடன் சாப்பிடுவதில் ஒரு அலாதி இன்பம் இருக்கின்றது. 

ஆனால் உளுந்து வடை செய்ய வேண்டும் என்றால் மிகப்பெரிய பிரச்சினை உளுந்தை மணிக்கணக்கில் ஊற வைக்க வேண்டும் என்பது தான்.

மொறு மொறு சுவையில் உளுந்து வடை வேண்டுமா? இப்படி செய்ய உளுந்தே தேவையில்லை! | How To Make A Medu Vada Within 10 Minites

அதனால் திடீர் முடிவெடுத்து உளுந்து வடை செய்வது முடியாத விடயம்.  இந்த பிரச்சினைக்கு தீர்வு கொடுக்கும் வகையில் வெறும் பத்தே நிமிடங்களில் உளுந்தே இல்லாமல் எப்படி உளுந்து வடை செய்வதென இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

பச்சரிசி மாவு - 1 கப்

மோர் - 1 கப்

உப்பு - சுவைக்கேற்ப

தண்ணீர் - 1 கப் 

இஞ்சி - 1 இன்ச் (துருவியது) 

பச்சை மிளகாய் - 4 (பொடியாக நறுக்கியது) 

சீரகம் - 1/2 தே.கரண்டி 

கறிவேப்பிலை - சிறிதளவு  (பொடியாக நறுக்கியது) 

கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது)

பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) 

எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

மொறு மொறு சுவையில் உளுந்து வடை வேண்டுமா? இப்படி செய்ய உளுந்தே தேவையில்லை! | How To Make A Medu Vada Within 10 Minites

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் பச்சரிசி மாவை எடுத்து, அதில் 1 கப் மோரை ஊற்றி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்றாக கலந்துக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து அதனுடன் 1 கப் தண்ணீரையும் ஊற்றி, நன்றாக தோசை மாவு பதத்திற்கு கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து அந்த மாவு கவவையுள்ள பாத்திரத்தை அடுப்பில் வைத்து, மிதமான தீயில் 5 நிமிடங்கள் நன்றாக கிளறிவிட வேண்டும். 

மொறு மொறு சுவையில் உளுந்து வடை வேண்டுமா? இப்படி செய்ய உளுந்தே தேவையில்லை! | How To Make A Medu Vada Within 10 Minites

சாக்லேட் சாப்பிட்டதும் சிலர் குஷியாகிவிடுவதற்கு என்ன காரணம்னு தெரியுமா?

சாக்லேட் சாப்பிட்டதும் சிலர் குஷியாகிவிடுவதற்கு என்ன காரணம்னு தெரியுமா?

மாவு சற்று கெட்டியாகத் ஆரம்பித்ததும், அதில் துருவிய இஞ்சி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.

அதனையடுத்து அதில் சீரகம், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து ,மாவு நன்கு வெந்து வரும் வரை நன்கு கிளறி விட்டு வேக வைக்க வேண்டும்.

கையில் நீரைத் தொட்டு மாவை எடுத்தால் மாவு கையில் ஒட்டாமல் இருக்கும் பதத்துக்கு வரும் போது அடுப்பை அணைத்துவிட்டு, கொத்தமல்லியைத் தூவி கிளறி விட வேண்டும். 

அதனையடுத்து பொடியாக நறுக்கிய வெங்காயத்தையும் அதில் சேர்த்து, நன்றாக கலந்து விட வேண்டும்.

மொறு மொறு சுவையில் உளுந்து வடை வேண்டுமா? இப்படி செய்ய உளுந்தே தேவையில்லை! | How To Make A Medu Vada Within 10 Minites

வேர்க்கடலை சட்னியில் இதை மட்டும் சேர்த்து செய்ங்க - சுவை அள்ளும்

வேர்க்கடலை சட்னியில் இதை மட்டும் சேர்த்து செய்ங்க - சுவை அள்ளும்

அடுத்து கையில் எண்ணெய் தடவி, மாவை கொஞ்சம் எடுத்து உருட்டி, லேசாக தட்டையாக தட்டி, நடுவே ஓட்டை போட்டு, ஒரு தட்டில் அடுக்கி வைத்துக்கொள்ள வேணடும்.

கடைசியாக ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், தட்டி வைத்துள்ள வடைகளைப் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுத்தால் அவ்வளவு தான்  மொறுமொறுப்பான மெதுவடை தயார். 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US