நாள்பட்ட நுரையீரல் சளியை கரைத்து வெளியேற்றும் உணவுகள்
நுரையீரல் என்பது உயிரினங்கள் சுவாசிக்க உதவும் ஒரு முக்கிய உறுப்பு ஆகும், இது உடலுக்குத் தேவையான ஆக்சிஜனை எடுத்துக்கொண்டு, கார்பன் டை ஆக்சைடை வெளியேற்றுகிறது.
இந்த வாயுப் பரிமாற்ற செயல்முறைக்கு நுரையீரல் முக்கியப் பணியாக விளங்குகிறது. மேலும், சில வேதிப் பொருட்களை உருவாக்குவதிலும், சில வேதிப் பொருட்களைச் செயலிழக்கச் செய்வதிலும் இது முக்கியப் பங்காற்றுகிறது.
இந்த நுரையீரலில் கபம் எனும் சளி உற்பத்தி செய்யப்படுகின்றது. இந்த சளியால் குறிப்பிட்ட நபர் பல சிரமங்களை சந்திக்க வேண்டி இருக்கும். இந்த சளியை அப்படியே வெளியேற்ற சில உணவுகளை சாப்பிடால் போதும். அந்த உணவுகளை பார்க்கலாம்.

சளியை நீக்கும் உணவுகள்
திரவங்கள், குறிப்பாக காஃபின் இல்லாத தண்ணீர், நமது சளியை தளர்த்த உதவும், இதனால் நகரவும் இருமவும் எளிதாகிறது. ஆனால், நாம் உண்ணும் உணவுகளிலிருந்தும் H20 கிடைக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
எனவே, உணவு திட்டமிடல் என்று வரும்போது, சில உணவுகள் சளி உற்பத்தியைக் குறைத்து , நம் உடலை நன்கு நீரேற்றமாக வைத்திருக்க உதவும்.

சால்மன் - இந்த சால்மன் மீனில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இது வீக்கத்தைக் குறைத்து உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.
இந்த மின் போன்ற சில கடல் மீன்களிலும் கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளது. எனவே நுரையிரல் சளி பிரச்சனையால அவதிப்படுபவர்கள் சால்மன் மீனை உணவுகளி்ல் சேர்த்து கொள்ளலாம்.

செலரி - நுரையீரல் அழற்சி, ஆஸ்துமா, தொண்டை தொடர்பான நோய்களை இந்த செலரி சரி செய்து விடும். இந்த செலரியை சாறாக காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம். அப்படி அது பிடிக்கவில்லை என்றால் இதை சூப் செய்து குடிக்கலாம்.
எப்படியாவது செலரியை நாம் நமது உணவில் எடுத்துக்கொண்டால் உடல் குளிர்ச்சியடைவதுடன் நுரையீரல் சளியையும் வெளியேற்ற முடியும்.

குழம்பு சார்ந்த சூப்கள் - இருமல் மூக்கில் சளி அடைப்பு இதுபோல எதாவது பிரச்சனைகள் இருப்பின் அது நுரையீரல் சளி நாள்பட்டு இருக்கிறது என்பதற்கான அறிகுறியாகும்.
இதற்கு கோழி ஆட்டுகால் மற்றும் காய்கறிகளில் ப்ரொகோழி தக்காளி போன்ற 3சூப்களை வைத்து குடிக்க வேண்டும்.
இந்த சூப்கள் குடிக்கும் போது திரவங்கள், குறிப்பாக சூடாக இருக்கும்போது தான் குடிக்க வேண்டும். அப்போது தான் சளியை தளர்த்தி வெளியேற்ற உதவும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |