30 நாள் பச்சை பூண்டு – மருந்தா? விஷமா? அவசியம் தெரிஞ்சுக்கோங்க
பூண்டு அதன் தனித்துவமான சுவை மற்றும் சக்திவாய்ந்த சுகாதார நன்மைகளுக்காக சமையலில் அதிகம் விரும்பப்படும் ஒரு பொருளாகும்.
இதை சிலர் பச்சையாகவும் வதக்கியும் ஊறுகாய் செய்தும் போன்ற பல வழிகளில் சாப்பிடுவார்கள்.
ஆனால் பச்சையான பூண்டை உட்கொள்வது பாதுகாப்பானதா என்பது பலருக்குத் தெரியவில்லை.
இந்த பதிவில் 30 நாட்கள் தொடர்ந்து பச்சை பூண்டை அப்படியே சாப்பிட்டால் உடலுக்கு என்ன நடக்கும் என்பதை பார்க்கலாம்.

பூண்டு
தினமும் உணவில் பூண்டை சேர்த்து கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதுமட்டுமின்றி இது உணவில் சுவை சேர்க்கவும், மருத்துவ குணங்களுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.
பூண்டில் பொட்டாசியம், பாஸ்பரஸ், துத்தநாகம், கந்தகம், வைட்டமின்கள் ஏ, பி, சி போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளன. இந்த பூண்டு சாதாரண சளியில் இருந்து கொலஸ்ட்ரால் வரை குணமாக்கலாம் என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள்.
சிலருக்கு இதன் வாசனை பிடிக்காத காரணத்தினால் பலரும் பூண்டு சாப்பிடுவதை புறக்கணிக்கிறார்கள். ஆனால் பூண்டில் அல்லிசின் என்ற கலவை உள்ளது.
இது ஒரு சக்தி வாய்ந்த ஆன்ட்டி ஆக்ஸிடண்ட் ஆகும். அல்லிசின், நோய்களை உண்டாக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் வைரஸ்களை எதிர்த்து போராட உதவுகிறது.
இதை ஒரு மாதத்திற்கு தொடர்ச்சியாக சாப்பிடுவது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் பல நன்மைகளை வழங்கும்.

எப்படி சாப்பிட வேண்டும்?
பூண்டு ஆரோக்கியம் தானே என்று அதிகமாக சாப்பிட கூடாது. ஒரு நாளைக்கு 1 முதல் 2 பூண்டு பற்கள் சாப்பிடுவது பாதுகாப்பானது. பூண்டை பச்சையாக அப்படியே மென்றும் சாப்பிடலாம் அல்லது சாலட், பிரெட்டில் வைத்து சாப்பிடலாம்.
தேனுடனும் சாப்பிடலாம். ஆனால் உடலில் முன்கூட்டியே ஏதாவது பிரச்சனை இருந்தால் மிக மருத்துவரிடம் இப்படி எனக்கு இந்த பிரச்சனைகள் உள்ளது நான் பூண்டு பச்சையாக சாப்பிடலாமா என கேட்டு சாப்பிடுங்கள்.
மிக முக்கியமாக கர்ப்பிணிகள், பால் கொடுக்கும் பெண்கள், முதியவர்கள் இந்த பச்சை பூண்டை தொடர்ந்து 30 நாட்கள் சாப்பிட முன்னர் அல்லது பச்சை பூண்டு சாப்பிட வேண்டும் என்றால் மருத்துவ ஆலோசனை கேட்பது நன்று.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |