Bigg Boss: பதவியை ராஜினாமா செய்து கதறியழுத Vikkals! விருந்தினரையே அழ வைத்த போட்டியாளர்கள்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் மக்களை மகிழ்வித்து வந்த விக்கல் விக்ரம் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு கதறி அழுதுள்ளார்.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரபப்பாகிவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியானது மக்களிடம் நல்ல வரவேற்பினைப் பெற்றுள்ளது. கடந்த மாதம் 5ம் தேதி ஆரம்பித்த இந்நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
இதில் ஐந்து பேர் வெளியேற்றப்பட்ட நிலையில், இந்த வாரத்தில் நான்கு வைல்டு கார்டு போட்டியாளர் உள்ளே சென்றுள்ளனர். இதனால் பிக் பாஸ் வீடு கடும் மோதலில் காணப்படுகின்றது.

ஆஹா ஓஹோ ஹோட்டல்
இந்த வாரத்தில் ஆஹா ஓஹோ ஹோட்டல் டாஸ்க் நடைபெற்று வருகின்றது. இதனால் பிக் பாஸ் வீட்டிற்கு விருந்தினராக பிரியங்கா, தீபக், மஞ்சரி ஆகியோர் வந்துள்ளனர்.
முதல்நாளில் நான்றாக சென்று கொண்டிருந்த இந்த டாஸ்க் தற்போது போட்டியாளர்கள் கடுமையான சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்றைய தினம் திவ்யாவின் பதவி பறிபோன நிலையில், இன்று விக்கல்ஸ் தனது பதவியினை ராஜினாமா செய்துள்ளார். மேலும் தான் வெளியே வைத்திருக்கும் பெயர் கஷ்டப்பட்டு உருவாக்கியது என்றும் நான் அனைவருக்கும் நல்லது மட்டுமே செய்தேன்... ஆனால் நீங்கள் புரிந்து கொள்ளவில்லை என்று கஷ்டப்பட்டுள்ளார்.
அதுமட்டுமின்றி விருந்தினராக வந்த தீபக்கும் அழுதுள்ளார். இதற்கான காரணம் தெரியவில்லை. இன்று வீட்டிற்கு தனது வேலையை செய்யாமல் கஷ்டப்பட வைத்தது சாண்ட்ரா ஆவார்.
சாண்ட்ரா அனைவரையும் பழிவாங்க இதனை செய்கின்றாரா? அல்லது பிக் பாஸ் சீக்ரெட் டாஸ்க் எதுவும் கொடுத்துள்ளாரா? என்ற குழப்பத்தில் பார்வையாளர்கள் காணப்படுகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |