மலச்சிக்கல் பாடாய் படுத்துதா? அப்போ இந்த காய்கறிகளை அதிகமாக சாப்பிடுங்க
தற்போது இருக்கும் மோசமான பழக்கங்கள் காரணமாக மலச்சிக்கல் பிரச்சினை நம்மிள் பலருக்கு உள்ளது. மலச்சிக்கல் நாம் நினைக்கும் அளவுக்கு சாதாரணமாக இருக்காது.
ஒருவிதமான அசௌகரியத்தை ஏற்படுத்திக் கொண்டே இருக்கும். மன அழுத்தம் இருப்பவர்களுக்கு இந்த பிரச்சினை அதிகமாகவே இருக்கும். முடிந்தளவு ஆரம்ப கட்டங்களில் மலச்சிக்கலை சரிச் செய்ய முயற்சிக்க வேண்டும்.
அப்படி குடலியக்கம் சிறப்பாக இல்லாவிட்டால் உடலில் சேரும் கழிவுகள் தினமும் சரியாக வெளியேற்றப்படாமல் வேறு விதமான வயிற்று பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் நார்ச்சத்துள்ள உணவுகளை அடிக்கடி சாப்பிட வேண்டும். நார்ச்சத்து கொண்ட பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிட வேண்டும்.
அத்துடன் குடல் ஆரோக்கியத்திற்கு வேண்டிய பிற சத்துக்களும் நிரம்பியுள்ளன. அந்த காய்கறிகளை ஒருவர் தங்களின் உணவில் அதிகம் சேர்த்து வந்தால், மலச்சிக்கல் பிரச்சனையை சந்திக்க வேண்டிய அவசியமே இருக்காது.
அந்த வகையில், மலச்சிக்கல் பிரச்சினையுள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் என்னென்ன என்பதை பதிவில் பார்க்கலாம்.
பசலைக்கீரை | கீரைகளில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது. அதிலும் குறிப்பாக பசலைக்கீரையில் உள்ள நார்ச்சத்துக்கள் தேங்கி இருக்கும் மலத்தை குடல் வழியாக வெளியேற்றுகிறது. பசலைக்கீரையில் மக்னீசியம் என்னும் கனிமச்சத்து உள்ளதால் செரிமானத்தின் பாதைகளின் தசைகள் ரிலாக்ஸாக இருக்கும். |
கேரட் | கேரட் கண்களுக்கு மிக நல்லது என பலரும் கூறுகிறார்கள். கேரட்டில் உள்ள கரோட்டீன் சத்துக்கள் செரிமானத்தை சிறப்பாக வைத்துக் கொள்ள உதவியாக இருக்கிறது. கரையக்கூடிய நார்ச்சத்து நீரை உறிஞ்சவும் குடலியக்கம் சீராகி, மலச்சிக்கலை தடுக்கப்படுகிறது. |
ப்ராக்கோலி | காலிஃப்ளவர் போன்று பச்சை நிறத்தை காணப்படும் ப்ராக்கோலி உள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் நோய்க்கு மருந்தாகிறது. ப்ராக்கோலியில் காணப்படும் சேர்மங்கள் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு உதவி புரிந்து, செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தப்படுகிறது. ப்ராக்கோலியை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிடும் பொழுது மலச்சிக்கலில் இருந்து விடுபடலாம். ஒட்டுமொத்த குடல் ஆரோக்கியம் மேம்படும். |
சர்க்கரைவள்ளிக் கிழங்கு | சர்க்கரைவள்ளிக் கிழங்கு மிக சுவையாக இருக்கும். நார்ச்சத்து அதிகமாக உள்ளது. கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்துக்கள் இந்த கிழங்கில் உள்ளதால் குடல் இயக்கம் சிறப்பாக இருக்கும். நீர்ச்சத்து, வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி போன்ற சத்துக்கள் மலச்சிக்கல் நோயை குணப்படுத்தும். |
முட்டைக்கோஸ் | முட்டைக்கோஸில் உள்ள நார்ச்சத்து, நீர்ச்சத்து குடலியக்கம் சிறப்பாக நடைபெறும். அதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன. இவை குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், வீக்கத்தை குறைக்கவும் உதவுகின்றன. ஆகவே மலச்சிக்கலால் அவதிப்பட்டு வருபவர் முட்டைக்கோஸ் சாப்பிடலாம். |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |