ரவை மட்டும் இருந்தா போதும்! வெறும் 10 நிமிடத்தில் இப்படி அப்பம் செய்து சாப்பிடுங்க
ரவை என்றாலே வெறுத்து ஒதுக்குபவர்களுக்கு நடுவே, ரவையில் சூப்பர் டேஸ்டியான அப்பம் செய்து சாப்பிடலாம்.
ரவையில் உள்ள பயன்கள்
ரவை மாவில் குறைந்த அளவிலான கொழுப்பு மற்றும் அதிக கார்போஹைட்ரேட், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், வைட்டமின் ஈ, புரதம் மற்றும் நார்ச்சத்துகள் நிறைந்துள்ளன.
இது பசியை போக்கி கட்டுப்படுத்துவதால் எடை இழப்புக்கு பெரிதும் உதவுகிறது, மேலும் இதில் உள்ள புரதம் வளர்சிதை மாற்றத்தை (metabolism) மேம்படுத்துகிறது.
செரிமானத்தை அதிகப்படுத்துவதால், வயிற்று தொடர்பான நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.
மலச்சிக்கலை போக்குவதுடன், கொலஸ்ட்ரால் அளவை ஒழுங்குபடுத்த உதவுகிறது.
இதைக்கொண்டு அப்பம் செய்வது எப்படி என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
மைதா - ஒரு கப்
ரவை - அரை கப்
வெல்லம் - ஒரு கப்
நன்கு பழுத்த பூவன்பழம் - 1
ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்
ஆப்ப சோடா - ஒரு சிட்டிகை
நெய் - 2 டேபிள்ஸ்பூன்
பொடியாக நறுக்கி வறுத்த தேங்காய் துண்டுகள் - கால் கப்.
செய்முறை
மைதாவுடன் ரவை, ஏலக்காய்த்தூள், தேங்காய் சேர்க்கவும்.
வெல்லத்தை சிறிது தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து உருக்கவும்.
பாகு உருகியதும், சூடாக இருக்கும்போதே வடிகட்டி, மைதா கலவையை சேர்க்கவும்.
வாழைப்பழத்தையும் நன்கு பிசைந்து, கடைசியில் ஆப்ப சோடா சேர்த்து இட்லி மாவு பதத்தில் கலந்து, குழிப்பணியாரக் கல்லில் நெய் தடவி ஊற்றி எடுக்கவும்.