நேரத்திற்கு சாப்பிடாமல் இருப்பவரா நீங்கள்? பாரிய ஆபத்து ஏற்படும் ஜாக்கிரதை
இன்றைய அவசர உலகில் பலரும் உணவிற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அவ்வாறு உணவு முக்கியத்துவம் கொடுக்கவில்லை எனில் பல பின்விளைவுகளை சந்திக்க நேரிடலாம். ஒரு நாளில் நாம் எந்தெந்த நேரம் உணவினை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து கொள்வோம்.
காலை உணவு
காலை உணவை 7 மணி முதல் 8 மணிக்குள் சாப்பிடவும். 10 மணிக்கு மேல் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.
காலை உணவு மூளைக்கு ஆற்றலைத் தருவதுடன், உடலின் இயக்கத்திற்கும் உதவுகின்றது. அவசரமாகக் கிளம்பும் சூழலில், காலை உணவைப் பலர் தவிர்ப்பார்கள். இவ்வாறு தவிர்ப்பதால், தலைவலி, அசிடிட்டி, உடற்பருமன் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
மதிய உணவு
மதிய உணவினை 12 மணி முதல் 1.30 மணிக்குள் சாப்பிடவும். 3 மணிக்கு மேல் சாப்பிடுவதை தவிர்க்கவும்.
மதிய உணவிற்கும், காலை உணவிற்கும் 4 மணி நேரம் இடைவெளி இருக்கலாம். இது, ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு சரியாக பராமரிக்க உதவும். அதிக பசி, பசியின்னை போன்ற பிரச்னைகளும் தவிர்க்கப்படும்.
தண்ணீர் குடிக்கும் போது செய்யக்கூடாத தவறுகள்
இரவு உணவு
இரவு உணவை 7 மணி முதல் 8 மணிக்குள் சாப்பிடவேண்டும். 9 மணிக்கு மேல் சாப்பிடுவதை தவிர்க்கவும்.
தூங்குவதற்கு இரண்டு மணி நேரம் முன்பாகவே சாப்பிட்டுவிட வேண்டும். இல்லையெனில் தொப்பை, உடற்பருமன், எதுக்களித்தல், செரிமானப்பிரச்சினை ஆகியவை ஏற்படும்.
சாப்பிட்டவுடன் தூங்கினால் உணவின் கலோரிகள் ஆற்றலாக மாறாமல், உடலில் சேர்ந்து உடற்பருமனுக்கு வழிவகுக்கும்.