தலைமுடி ரொம்ப Dry- ஆ இருக்கா? அப்போ இந்த டிப்ஸ் செஞ்சி பாருங்க- பலன் நிச்சயம்
பொதுவாக தற்போது இருக்கும் மோசமான வாழ்க்கை முறையால் தலைமுடி பிரச்சினையால் அதிகம் அவஸ்தைப்படுகிறார்கள்.
இதற்கான முக்கிய காரணங்களில் பருவத்தில் உச்சந்தலையில் வறட்சி அதிகரிப்பு ஒன்றாக பார்க்கப்படுகின்றது.
இதனை கண்டுக் கொள்ளாத பட்சத்தில் தலைமுடி உதிர்வு அதிகமாக வாய்ப்பு இருக்கின்றது.
தலைமுடி உதிர்வதை தடுப்பதற்காக பலர் பலவிதமான இரசாயனப் பொருட்களை தலைக்கு பயன்படுத்தி வருகிறார்கள்.
ஆனால் இவற்றை தவிர வீட்டிலுள்ள மூலிகைப் பொருட்களை கொண்டு வீட்டு வைத்தியம் செய்யலாம். இது தலைமுடி தொடர்பான பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக அமையும்.
அந்த வகையில், தலைமுடி உதிர்வை தடுக்கும் எளிய வழிமுறைகள் பற்றி தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
1. அதிகமாக தலைக்கு குளித்தல்
தினமும் தலைக்கு குளிக்க வேண்டாம் என பலரும் கூறுவார்கள். இதற்கான முக்கிய காரணம் தினமும் தலைக்கு குளிக்கும் பொழுது இயற்கையான எண்ணெயை அகற்றி, கூந்தலை மேலும் வறண்டதாக மாற்றும். இதனால் வாரத்திற்கு வாரத்திற்கு 2 முதல் 3 முறை வாஷ் செய்வது சிறந்தது. தவறும் பட்சத்தில் தலைமுடி வறண்டு போய் விடும்.
2. இயற்கையாக உலர வைக்கவும்
பொதுவாக பெண்கள் தலைமுடியை விரைவாக உலர்த்துவதற்கு ஹேர் ட்ரையர் பயன்படுத்துவார்கள். இது தலைமுடிக்கு அதிகமான வெப்பத்தை கொடுத்து முடியை வறட்சியாக்கும். அத்துடன் முடி உடைதல் பிரச்சனை, தலை உதிர்வு பிரச்சினை ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. இவற்றை தடுப்பதற்கு இயற்கையான முறையில் தலைமுடியை உலர்த்துவது சிறந்தது. வீடுகளில் இருக்கும் காட்டன் துண்டை பயன்படுத்தி தலைமுடியை இலகுவாக உலர்த்தலாம்.
3. குளிர்ந்த நீரில் குளிக்கவும்
சிலர் காலநிலை மாற்றம் ஏற்படும் பொழுது குளிர் தாங்க முடியாமல் சூடு நீரில் குளிப்பார்கள். இது அவர்களின் தலைமுடியை சேதப்படுத்தும். வெந்நீரில் இருக்கும் அதிகப்படியான வெப்பம் தலைமுடியை மிகவும் வறட்சியாக்கி, உடையச் செய்யும். தலைமுடிக்கு பெரும்பாலும் குளிர்ந்த நீரை பயன்படுத்துவது சிறந்தது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |