தினமும் ஒரு வெள்ளரிக்காய் எடுத்துக்கோங்க... உடல் எடை கடகடவென குறையுமாம்
தினமும் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிடுவதால் உடம்பிற்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
வெள்ளரிக்காய்
நீர்ச்சத்து அதிகம் கொண்ட வெள்ளரிக்காய் நமக்கு பல நன்மைகளை அளிப்பதுடன், உடல் ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிக்கின்றது.
95 சதவீதம் நீர்ச்சத்து நிறைந்த வெள்ளரிக்காய் நீங்கள் அடிக்கடி எடுத்துக் கொண்டால் உடல் ஈரப்பதத்தை சரியாக வைத்திருக்கவும், நீர்ச்சத்து கிடைக்கவும் உதவுகின்றது.
வெள்ளரியின் சுவை நறுமணங்கள், வாய் துர்நாற்றத்தை போக்க உதவுகின்றது. இதில் உள்ள நார்ச்சத்துக்கள் செரிமானத்தை மேம்படுத்தி, மலச்சிக்கலையும் தடுக்கின்றது.
கால்சியம், துத்தநாகம், மக்னீசியம் போன்ற சத்துக்கள் உள்ளதால், தசைகள் மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றது.
இதில் உள்ள ஸ்டெரோல்கள் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்துவதற்கு உதவுகின்றது. நீர்ச்சத்துடன் இதில் உள்ள வைட்டமின் சி சத்துக்கள் சரும பளபளப்பாகவும், இளமையாகவும் வைத்திருக்க உதவுகின்றது.
வெள்ளரியில் குறைந்த கலோரி உள்ளதால், பசியைக் கட்டுப்படுத்தி எடையைக் குறைக்கவும் செய்கின்றது. உடல் சூட்டை குறைக்கவும் செய்கின்றது.
இதேபோல், தினமும் வெள்ளரிக்காய் உணவில் சேர்ப்பது உடலுக்கு பல்வேறு வகையில் ஆரோக்கியம் அளிக்கிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |