Medical Facts: சாக்ஸ் அணியாமல் ஷூ போட்டால் என்ன நடக்கும்? இனி மறக்காதீங்க- விளைவு பயங்கரம்
பொதுவாக இன்றைய காலகட்டத்தில் சாக்ஸ் இல்லாமல் ஷூக்களை அணிகிறார்கள்.
இதனை ஆண்களை மட்டுமல்ல பெண்களும் இதை பின்பற்றி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக இளைஞர்கள் சாக்ஸ் அணிவதை மறந்து விட்டார்கள்.
ஆனால் இந்த பழக்கம் ட்ரெண்டிங்கில் இருந்தாலும் ஆரோக்கியத்திற்கு இது நல்லதல்ல என கூறப்படுகின்றது.
சாக்ஸ் அணியாமல் ஷூஸ் அணியும் பழக்கம் கொண்டவர்கள் சில நோய்களை ஏற்படுத்தும் என்கிறார்கள்.
அந்த வகையில் சாக்ஸ் அணியாமல் ஷூஸ் அணிவதால் ஏற்படும் விளைவுகளை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
1. பூஞ்சை தொற்று
சாக்ஸ் அணியாமல் ஷூக்களை அதிக நேரம் அணிந்திருக்கும் பொழுது கால்கள் கண்டிப்பாக வியர்க்கும். அந்த சமயம் நீங்கள் சாக்ஸ் அணியாவிட்டால் கால்கள் ஈரப்பதம் அதிக நேரம் இருக்கும். இதன் விளைவாக பூஞ்சை, பாக்டீரியாக்கள் அதிகரித்து பூஞ்சை தொற்றுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
2. கால்களில் கொப்புளங்கள் தோன்றுதல்
சாக்ஸ் பாதங்களுக்கும், ஷூக்களுக்கும் இடையிலான பாதுகாப்பை பேணுகின்றது. நீண்ட நேரம் சாக்ஸ் இல்லாமல் ஷுக்களை அணியும் போது பாதங்களில் கொப்புளங்கள் வர வாய்ப்புள்ளது. அத்துடன் பாத ஓரங்களில் அரிப்பு மற்றும் எரிச்சல் ஏற்படலாம். இவை காலப்போக்கில் காலில் காயங்களாக கூட மாறலாம். அதே சமயம் இறுக்கமான ஷூக்களுக்கு சாக்ஸ் அணியாமல் போட்டால் ஒரே நாளில் இந்த விளைவுகளை அனுபவிப்பீர்கள்.
3. பாதத்தின் தோல் தொற்று வரலாம்
நீண்ட நேரம் சாக்ஸ் இல்லாமல் ஷூக்களை அணியும் பொழுது கால்களில் நீண்ட நேரம் ஈரப்பதம் இருக்கும். இதனால் தோலில் உராய்வு ஏற்படும். இது தோல்களில் சில தொற்றுக்களை ஏற்படுத்தும். இந்த விளைவை ஆரம்பத்தில் கவனிக்காமல் இருந்தால் நிலைமை மோசமாகி விடும். எனவே உங்கள் பாதத்தில் ஏதேனும் தொற்று நீண்ட நாட்களாக இருந்தால் உடனே மருத்துவரை அணுகுவது சிறந்தது.
4. துர்நாற்றம் பிரச்சினை
சாக்ஸ் இல்லாமல் ஷூ அணிபவர்கள் துர்நாற்றம் பிரச்சினையால் கண்டிப்பாக அவஸ்தைப்படுவார்கள். ஏனெனின் பாதங்களில் பாக்டீரியாக்கள் பெருகும் பொழுது கண்டிப்பாக துர்நாற்றம் ஏற்படும். இது உங்களை சுற்றியிருப்பவர்களுக்கு சங்கடங்களை ஏற்படுத்தும். அதிலும் குறிப்பாக, சாக்ஸ் இல்லாமல் லெதர் ஷூக்களை அணியும் பொழுது துர்நாற்றம் அதிகமாக இருக்கும். முடிந்தவரை ஷுக்கள் அணியும் முன்னர் சாக்ஸ் அணிவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |