இந்த 4 விடயங்களையும் பின்பற்றுங்க பணக்கஷ்டமே வராதாம்!
பணம் என்பது அனைவருக்குமே இன்றியமையாத ஒன்றாக காணப்படுகிறது. ஒரு மனிதன் பிறந்தது முதல் அவன் இறக்கும் வரையில் பணம்தான் அவனை ஆட்கொள்கின்றது எனலாம்.
எவ்வாறெனினம் பணம் என்பது செலவழியும் ஒன்றுதான். இருப்பினும் அந்தப் பணத்தை குறையவிடாமல் தக்கவைத்துக் கொள்வதில்தான் அனைத்தும் அடங்கியுள்ளது.
சாணக்கிய நீதியின்படி சில விடயங்களை செய்தால் பணக்கஷ்டமே வராதாம்.
சரி இனி அது என்னென்ன விடயங்கள் என்று பார்ப்போம்.
கர்வம் கொள்ளக்கூடாது - சிலர் பணம் வந்தவுடன் தலைகால் புரியாமல் ஆடுவார்கள். ஆனால், உண்மையில் எந்தவொரு மனிதனும் பணத்தின் மீது வெறிகொண்டவர்களாக இருக்கக்கூடாது.
பணம் சம்பாதித்தன் பின்னர் அவர்களிடம் கர்வம் குடிகொண்டால், பணம் அவர்களிடம் நீண்டகாலம் நிலைக்காது. பணம் வந்தாலும் அடக்கமாக இருக்கப் பழக வேண்டும். அப்போதுதான் எப்பொழுதுமே பணம் அவ்ரகளிடம் நிலைத்திருக்கும்.
பணம் செலவழிக்கும் முறை - சொத்துக்களை சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக பணத்தை செலவழிப்பதை முதலில் நிறுத்த வேண்டும். அதுமாத்திரமின்றி நாம் கஷ்டத்தில் இருக்கும்பொழுது பணம் நமக்கு உற்ற தோழனாக இருக்கிறது.
பணத்தை தண்ணீரைப் போல வீணாக செலவழிக்காமல் சரியான விடயங்களுக்கு செலவழிக்க வேண்டும்.
பணம் சம்பாதிக்கும் முறை - பணத்தை எப்பொழுதும் நேர்மையான வழியில் சம்பாதிக்க வேண்டும். ஏனென்றால் நேர்மையான வழியில் வரும் பணம் நிலையானதாக இருக்கும்.
தானியக் களஞ்சியம் - வீட்டில் தானியங்கள் முடியும் முன்பே புதிய தானியத்தை வாங்கிவிட வேண்டும். இது வயிற்றை நிரப்புவது மட்டுமில்லாமல் செல்வத்தை நிலைத்திருக்கவும் செய்கிறது.