மக்கள் பணத்தை அபேஷ் செய்த பிரபல நடிகர்! சமூக வலைத்தளங்களில் கசிந்த கம்பனி சிக்ரெட்
ஆருத்ரா கோல்டு நிறுவன பண மோசடியில் நடிகர் ஆர்கே சுரேஷுக்கு தொடர்பு இருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகி வருகிறது.
சினிமாவிற்கு செய்த சாதனை
தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளராகவும், நடிகராகவும் இருப்பவர் தான் நடிகர் ஆர்கே சுரேஷ். இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு “ தாரை தப்பட்டை” என்ற படத்தில் நடித்து சினிமாவிற்கு அறிமுகமாகியிருந்தார்.
இதனை தொடர்ந்து நடிகர் சுரேஷ் மருது, ஹரஹர மகாதேவகி, ஸ்கெட்ச், காளி, புலிக்குத்தி பாண்டி, நம்ம வீட்டு பிள்ளை, விசித்திரன், விருமன், பட்டத்து அரசன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
மேலும் இவரின் வில்லத்தனமான நடிப்பிற்கும் மிரட்டும் ரியாக்ஷனுக்கும் தமிழகத்தில் பல கோடி ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இந்நிலையில் சென்னையில் பிரபல நிறுவனமாக இயங்கி வரும் “ஆருத்ரா கோல்டு” நிறுவனம் பணம் மோசடியால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
பண மோசடியில் சிக்கிய பிரபலம்
இந்த நிறுவனத்தில் பணத்தை உள்ளீடு செய்பவர்களுக்கு 20 முதல் 30 சதவீதம் வட்டி தருவதாக அறிவித்திருந்தது. இதன்படி, 2,438 கோடி ரூபாயை பணம் குறித்து நிறுவனத்தால் மோசடி செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த வழக்கில் நடிகர் சுரேஸிற்கு பங்கு இருப்பதாக தகவல்கள் தெரிவித்து வருகிறது. குறித்த தகவல் சுரேஸின் ரசிகர்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது.