உங்களுக்கு சர்க்கரை வியாதி இருக்கா? அப்போ சமையலுக்கு இந்த மாவை பயன்படுத்துங்க!!
பொதுவாக இந்தியா போன்ற நாடுகளில் அதிகமான மக்கள் பாதிக்கப்படும் நோய்களில் ஒன்று தான் சர்க்கரை நோய்.
இது, தவறான உணவு பழக்கம் மற்றும் பரம்பரை இவ்விரண்டு காரணங்களால் ஏற்படுகின்றது.
நீரிழிவு நோய் ஏற்பட்டால் உடல் சரியான அளவு ஊட்டச்சத்தில் இருக்காது. அத்துடன் உணவு விடயத்தில் அதிகமான கவனம் இருக்க வேண்டும்.
அந்த வகையில், அதிக நார்ச்சத்து, சிம்பிள் கார்போஹைட்ரேட் மற்றும் லோ-கிளைகெமிக் இண்டெக்ஸ் கொண்ட உணவுகளை சாப்பிட வேண்டும்.
இந்தியா, இலங்கை என தமிழர்கள் வாழும் நாடுகளில் அரிசி மற்றும் கோதுமை நிறைந்த உணவுகள் அதிகமாக சாப்பிடுவார்கள்.
இதன்படி, சர்க்கரை வியாதியுள்ளவர்கள் சாப்பிடும் சாப்பாட்டில் என்ன வகையான மாக்களை சேர்த்து கொள்ள வேண்டும் என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்.
சர்க்கரை வியாதியுள்ளவர்கள் சாப்பிடும் மா வகைகள்
Image - rush
1. மல்டிகிரைன் மாவு
சர்க்கரை வியாதியுள்ளவர்கள் மல்டிகிரைன் ஃப்ளோர் என அழைக்கப்படும் தானியங்களை வாங்கி அதனை வீட்டில் பவுடர் செய்து பயன்படுத்தலாம்.
இந்த மா உடலுக்கு தேவையான நார்சத்து, வைட்டமின் மற்றும் லோ கிளைகெமிக் கார்போஹைட்ரேட்டுடன் ஆன்டி ஆக்ஸிடன்ட்களும் உள்ளன. இது சர்க்கரை அளவுடன் சேர்த்து உடல் எடையையும் குறைக்கின்றது.
2. கேழ்வரகு / ராகி மாவு
சர்க்கரை வியாதியுள்ளவர்கள் எந்த விதமான தயக்கம் இன்றி இந்த கேழ்வரகு மாவை சாப்பிடலாம். அத்துடன் குளுக்கோஸ் மற்றும் கொலஸ்ட்ரால் அளவு இரண்டையும் குறைக்கும்.
இந்த மாவை பயன்படுத்திகஞ்சி, கூழ் , குக்கிஸ், கேக் உள்ளிட்ட ஏராளமான உணவுகளை சமைக்கலாம்.
3. கொண்டை கடலை மாவு
புரதச்சத்து நிறைந்த தானியங்களில் கடலையும் ஒன்று. இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஆரோக்கியம் கொடுக்கின்றது.
நீரிழிவு நோயாளர்கள், கொண்டைக் கடலையை சாப்பிட்டு வந்தால் குளுக்கோஸ் மட்டுமல்லாமல் கொலஸ்ட்ரால் அளவையும் கட்டுக்குள் வைத்திருக்கும்.
அதிக அளவு புரதச்சத்து, இன்சுலின் சென்சிடிவிட்டியை அதிகரிப்பது மட்டுமல்லாது இதய நோய் வராமலும் தடுக்கின்றது.
4. ஓட்ஸ் மாவு
பொதுவாக ஓட்ஸ் சாப்பிட்டால் எடை குறையும் என்று பல ஆண்டுகளாக கூறப்பட்டு வருகிறது.
இந்த ஓட்ஸ்க்கு நார்ச்சத்து விடயத்தில் தனி இடம் இருக்கின்றது. ஓட்ஸ் சாப்பிட்டால் பசி கட்டுபடுத்தப்படும். இதனால் நீண்ட நாட்கள் பயணம் செய்பவர்கள் இதனை சாப்பிடுவார்கள்.
ஓட்சில் இருக்கும் பீட்டா-குளுகான் என்ற ஒரு காம்பவுண்ட் ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை அதிகரிக்காமல் கட்டுக்குள் வைக்கின்றது. கேழ்வரகு போல் இதனை பயன்படுத்தி ஏராளமான உணவு வகைகளை செய்யலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |