சர்க்கரை நோய்க்கு கொய்யாப்பழம் உதவுமா? ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைத்து ஆரோக்கியமாக்குமாம்!
பொதுவாகவே இனிப்பு என்றாலே அனைவருக்கும் பிடித்தமானதொன்றுதான். ஆனால் இந்த இனிப்பே பலருக்கு பல வியாதிகளைக் கொண்டு வருகிறது.
அவ்வாறு பார்க்கையில் இனிப்பு பிரியர்களுக்கு பெரிய எதிரியே இந்த சக்கரை வியாதி தான். இந்த சக்கரை வியாதியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்போதும் அவர்களுக்கென்று பல கட்டுப்பாடுகளால் கட்டிப் போட்டுவிடுவார்கள்.
இவர்கள் எந்த உணவை சாப்பிட வேண்டும்? எந்த உணவை சாப்பிடக்கூடாது என பல கேள்விகள் எழுந்து அவர்களுக்குள்ளே இருக்கும்.
ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் தான் இந்த நோய் உங்களைப் பின்தொடர்கிறது. அது மட்டுமல்லாமல் பரம்பரை நோயாகவும் உங்களை தொடரும்.
இந்த நோயைக் கட்டுப்படுத்த சரியான உணவுப்பழக்க வழக்கங்கள், உடற்பயிற்சி, முறையான தூக்கம் போன்றவற்றை கடைப்பிடித்தால் இந்தநோய் ஏற்படாமல் தடுக்கலாம், கட்டுப்படுத்தலாம்.
சக்கரை நோய்க்கு கொய்யாப்பழம்
சக்கரை நோயைக் கட்டுப்படுத்த துவர்ப்பு சுவையுடைய கொய்யாப்பழம் அருமருந்தாகும். பல வகையான நோய்களுக்கு பல பழங்கள் மருத்தாக மாறிவிடும்.
அந்தவகையில் கொய்யாப்பழமானது பல நோய்களுக்கு சிறந்த மருந்தாகும். இந்தக் கொய்யாப்பழம் புற்றுநோய்யையும் குணமாக்கும் வல்லமைக் கொண்டது.
கொய்யாக்காவில் அதிக அளவு கனிம பொருட்களும் ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளது. சர்க்கரை அளவு அதிகமாக உள்ளவர்கள் இந்த கொய்யாப்பழத்தை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை அளவு குறைகிறது.
உணவு இடைவேளைக்கு பிறகு நீங்கள் கொய்யாப்பழம் சாப்பிடலாம் அல்லது ஒவ்வொரு நாளில் காலை உணவின் போதும் பழங்களை சாப்பிடலாம்.
கொய்யா குறைவான கலோரி கொண்டவை என்பதால் இது எடை அதிகரிப்பை கட்டுக்குள் வைக்கிறது. அதிக எடை என்பது ரத்த சர்க்கரை அளவு உயர்வதற்கு காரணமாக அமைகிறது.
இந்த கொய்யா பழம் ரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது.