பாம்பு கடித்த உடனே கீறி விடாதீங்க.. இத பண்ணுங்க- ஆபத்து குறையும்!
எமது சமூகத்தில் ஏதாவது ஒரு பாம்பு கடித்து விட்டால் முதலுதவி செய்ய வேண்டும். ஒவ்வோரு ஆண்டும் 81,000 முதல் 1,38,000 பேர் வரை பாம்புக்கடியால் இறப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.
பெரும்பாலான பாம்புக்கடிகள் பதிவு செய்யப்படுவதில்லை. ஏனெனின் பாம்பு கடியால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனை போதியளவு கவனம் இருக்காது.
இந்தியாவில் 2000 முதல் 2019ஆம் ஆண்டு வரை 12 லட்சம் மக்கள் பாம்புக்கடியால் உயிரிழந்துள்ளனர். கடந்த 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெளியான ஓர் ஆய்வில் ஒவ்வொரு ஆண்டும் 58,000 மக்கள் உயிரிழக்கின்றனர்.
இந்தியா போன்ற நாடுகளில் உள்ள மக்கள் பாம்புகளைக் கடவுளாக வழிபடுகிறார்கள். விவசாய நிலங்களைப் பாதுகாப்பதற்கு கடவுள் பாம்புகளை அனுப்பி வைத்துள்ளதாக பழங்குடி சமூகத்தினர் மத்தியில் நம்பிக்கை உள்ளது.
மேலும், பாம்புகள் தொடர்பான நம்பிக்கைகள் தான் மக்கள் உயிரிழப்பதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
அந்த வகையில், பாம்பு கடிப்பட்ட ஒருவருக்கு முதலில் என்ன செய்ய வேண்டும் என்பதனை பதிவில் பார்க்கலாம்.
பாம்பு கடித்தால் என்ன நடக்கும்?
1. பாம்பு கடித்தவுடன் அந்த இடத்தில் வாய் வைத்து உறிஞ்சுவது தவறு. அதே போன்று சிலர் அந்த இடத்தில் கீறி விடக்கூடாது. இது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும்.
2. எல்லா பாம்புகளுக்கும் விஷம் இருக்காது. இதனால் எந்த பாம்பு கடித்தாலும் அதில் விஷம் இருக்கும் என நம்புவதை நிறுத்த வேண்டும். பாம்பு கடித்த இடத்தை இறுக்கமாக கட்டக்கூடாது.
3. ஒருவருக்கு பாம்பு கடித்து விட்டால் அந்த இடத்தை முதலில் சோப்பு போட்டு கழுவ வேண்டும். காலில் கடித்து விட்டால் நடத்தல், கூட்டம் போடுதல், பயம் காட்டுதல் உள்ளிட்ட விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.
4. பாம்பு கடித்த இடத்தில் வீக்கம் இருந்தால் வீக்கத்தை வைத்து சிலர் வைத்தியம் செய்வார்கள். அதனை தவிர்த்து விட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.
5. பாம்பு கடித்த நபருக்கு ரத்தப் பரிசோதனை செய்ய வேண்டும். வலி இருப்பின், அதற்கான மாத்திரைகளை கொடுக்க வேண்டும். நீங்களாகவே எந்த வலி நிவாரணி மருந்துகளையும் எடுத்துக்கொள்ளக்கூடாது
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |