வேகாத கோழிக்கறி சாப்பிட்டால் ஆபத்து- இனி தவறியும் செய்யாதீங்க!
வளர்ந்து வரும் நவீன மாற்றத்தால் உணவு பழக்கங்கள் நாளுக்கு நாள் மாற்றமடைந்து வருகிறது.
இதனால் சமீப நாட்களாக குய்லின்-பார் சிண்ட்ரோம் (Guillain-Barré Syndrome) நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. உணவு பாதுகாப்பில் தீவிரமாக கடைபிடிப்பவர்கள் சமையல் அறையில் கூடுதல் கவனம் எடுக்க வேண்டும்.
இந்த சிண்ட்ரோம் உடன் தொடர்புடைய பாக்டீரியா தொற்று அபாயத்தில் பாதுகாப்பு பெற சரியான உணவு கையாளுதல், உணவு சமைத்தல் உள்ளிட்ட நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என நிபுணர்கள் வலியுறுத்துகிறார்கள்.
அதே சமயம், சரியாக சமைக்கப்படாத கோழி இறைச்சியை சாப்பிடும் பொழுது நோய் நிலைமைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. “கேம்பிலோபாக்டர் ஜெஜூனி (Campylobacter jejuni)” தாக்கம் சுத்தம் இல்லாத காய்கறிகள், பால், அழுக்காக இருக்கும் இடங்களில் இருக்கும்.
அந்தவகையில் வேகாத கோழிக்கறி சாப்பிடுவதால் என்னென்ன பாதிப்புக்கள் ஏற்படும் என்பதனை பதிவில் பார்க்கலாம்.
கோழி இறைச்சி சாப்பிடுவதால் என்ன நடக்கும்?
1. சற்றே இளம் சிவப்பு நிற கோழி இறைச்சியை இருக்கும் பொழுது அதனை சாப்பிடக்கூடாது. மீறி சாப்பிடும் பழக்கம் கொண்டவர்கள் கேம்பிலோபாக்டர் ஜெஜூனி பாக்டீரியா தாக்கத்திற்கு ஆளாகுவார்கள். குய்லின்-பார் சிண்ட்ரோம் உடன் தொடர்புடைய முன்னணி பாக்டீரியா பாதிப்புகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
2. சிலர் தினமும் கோழிக்கறி சாப்பிடுவார்கள். அப்படி சாப்பிடும் பொழுது புரதச்சத்து அதிகரிக்கும். அதே சமயம் ஒரு நாளைக்கு 50 கிராமுக்கு மேல் சாப்பிடாமல் இருப்பது சிறந்தது.
3. தினமும் கோழிக்கறி சாப்பிடுவதால் உடலில் சோடியம் அதிகரித்து உயர் இரத்த அழுத்தம் பிரச்சினையை ஏற்படுத்தும். அதே சமயம், உடலில் புரதச் திரட்சி அதிகரித்து எலும்பு தொடர்பான பிரச்சினைகள் ஏற்படும்.
4. கோழி இறைச்சி சாப்பிடும் ஒருவருக்கு பெருங்குடல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. தினமும் சாப்பிட்டு வந்தால் கோழி இறைச்சியில் கொழுப்பின் காரணமாக இதயம் சார்ந்த நோய்கள் வர வாய்ப்பு உள்ளது.
5. கோழிக்கறியில் அதிகப்படியான வெப்பம் உள்ளது. தினமும் சாப்பிடும் ஒருவருக்கு உடலின் வெப்பநிலை அதிகரிக்கும்.அதிலும் குறிப்பாக பெண்களுக்கு இதனால் பல நோய்கள் வர வாய்ப்பு உள்ளது. எடை அதிகரிப்பும் ஏற்படலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |