பாஸ்மதி அரிசியில் பிரியாணி செய்பவரா நீங்கள்? இந்த அதிர்ச்சி தகவல் உங்களுக்கே
பிரியாணி என்றாலே அனைவரது நினைவில் வருவது பாஸ்மதி அரிசி தான். ஆம் அந்த அரிசியில் பிரியாணி செய்வது வேற லெவல் என்று தான் கூற வேண்டும்.
ஆனால் இந்த பாஸ்மதி அரிசியிலும் கலப்படம் இருக்கின்றது என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா? ஆம் இதில் இருக்கும் கலப்படத்தினை எவ்வாறு கண்டுபிடிப்பது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
ஆய்வு ஒன்றில் 495 கம்பெணி பெயர் கொண்ட அரிசி மாதிரிகளை சோதனைக்கு உட்படு்த்தப்பட்ட நிலையில், 50 சதவீத அரிசி போலியானது என்பது தெரியவந்துள்ளது.
பாஸ்மதி அரிசி சமைப்பதற்கு முன்னும் பின்னும் அதன் நீளம், அகலத்தை தெளிவாக ஆராய்ச்சியாளர்கள் வரையறுத்துள்ளனர்.
பாஸ்மதியை அதிக விலைக்கு விற்க அதனுள் தரமற்ற அரிசியை கலந்துள்ளதாகவும், இந்த அரிசியின் மணத்தினை கொண்டு வர ஒருவகை செடியின் சாற்றை தெளித்துள்ளதாகவும் கண்டுபிடித்துள்ளனர்.
அசல் பாஸ்மதியின் விபரம்
சமைக்கும் முன் பாஸ்மதி அரிசி நீளம் 6.61 மி.மீ
சமைக்கும் முன் பாஸ்மதி அரிசியின் அகலம் 2 மிமீக்கும் குறைவானது
சமைத்த பிறகு பாஸ்மதி அரிசியின் குறைந்தபட்ச அகலம் - 3.50 மி.மீ
சமைத்த பாஸ்மதி அரிசி நீளம் - 12 மி.மீ இந்த அளவுகளில் பொருந்தாத எதுவும் பாஸ்மதி அரிசியே கிடையாது என்பது தெரியவந்துள்ளது.