பிக் பாஸை விட்டு வெளியேறிய ராபர்ட் மாஸ்டருக்கு குவியும் பட வாய்ப்புக்கள்
பிக் பாஸை விட்டு வெளியேறிய ராபர்ட் மாஸ்டர்க்கு படவாய்ப்புகள் குவிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் சீசன் 6
கடந்த அக்டோபர் மாதம் பிக் பாஸ் சீசன் 6 சுமார் 21 போட்டியாளர்களுடன் கோலாகலமாக ஆரம்பமானது.
இதில் சின்னத்திரை பிரபலங்கள், இலங்கை சார்ந்த பெண், பாடகர்கள், தொகுப்பாளர்கள் என பல பிரபலங்கள் களமிறங்கினார்கள்.
இதில் சுமார் ஆறு வாரங்களாக மக்களின் ஆதரவை பெற்ற போட்டியாளர்களில் ராபட் மாஸ்டரும் உள்ளடங்கியிருந்தார்.
காதல் சர்ச்சை
மேலும் பிக் பாஸ் விட்டில் நிலைத்து இருப்பதற்காக ரக்ஷிதா மகாலட்சுமியை காதலிப்பதாக வதந்தியை பரப்பி வந்தார்.
இந்த விடயம் தெரிந்து ரக்ஷிதா எதிர்ப்பு தெரிவித்தார், இதனால் ரக்ஷிதாவின் ரசிகர்கள் இந்த தகவலை சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வந்தனர்.
இதன் காரணமாக ரக்ஷிதாவின் கணவரும் பிரபல தொலைக்காட்சிக்கு பேட்டியொன்றையும் கொடுத்திருந்தார்.
குவியும் திரைப்பட வாய்ப்புக்கள்
இந்நிலையில் பிக் பாஸை விட்டு கடந்த வாரம் வெளியேறிய ராபர்ட் மாஸ்டருக்கு திரைப்பட வாய்ப்புக்கள் குவிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனை பார்த்த நெட்டிசன்கள் இதற்கும் வனிதாவின் ஆதரவு இருக்கிறதா? என்று சந்தேகித்துள்ளனர்.
மேலும் இவரின் திரைப்பட போஸ்ட்ர்களும் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.