பிக்பாஸில் ராபர்ட் மாஸ்டருக்கு வழங்கப்பட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா?
பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய ராபர்ட் மாஸ்டர் வாங்கிய சம்பளம் தொடர்பாக தகவல் வெளியாகியுள்ளது.
பிக் பாஸில் பங்கேற்பு
பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 9ஆம் திகதி கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டு தற்போது மிகவும் விறுவிறுப்பாக சென்றுக் கொண்ருக்கிறது.
இந்நிகழ்ச்சியில் அதிகம் சின்னத்திரை பிரபலங்கள் கலந்துக் கொள்வதால் மக்கள் மத்தியில் பிக் பாஸ்க்கு தனி இடம் இருக்கிறது என்றே கூறலாம்.
ஆரம்பத்தில் 21 போட்டியாளர்களைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸில், தற்போது ஏழு போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர்.
சம்பளம் எவ்வளவு தெரியுமா
மக்களின் வாக்குகளில் குறைவான வாக்குகளைப் பெற்ற போட்டியாளர் ஒவ்வொரு வாரமும் வெளியேற்றப்படுவார்கள்.
அந்த வகையில் இந்த வாரம் ராபர்ட் மாஸ்டர் வெளியேறுகிறார். இவருக்கு தற்போது வரைக்கும் ஒரு வாரத்திற்கு ரூ. 1.50 முதல் ரூ. 2 லட்சம் சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.