பிக் பாஸ் சொல்லியும் கேக்கல - பார்வதிக்கு விஜய் சேதுபதி தானாக எடுத்த முடிவா அது?
பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று கம்ருதின் மற்றும் பார்வதிக்கு ரெட் கார்ட் கொடுத்த காரணம் பற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
பிக் பாஸ்
பிக்பாஸ் தமிழ் சீசன் 9இல் நேற்றைய எபிசோட் தான் அதிக அளவிலான ரசிகர்களால் பார்க்கப்பட்ட ஒரு எபிசோடாக இருந்தது. நேற்று பிக் பாஸில் நடந்த ஒரு விடயம் பிக்பாஸ் சீசன் 9இல் மக்கள் ஆரம்பத்தில் இருந்து வைத்த கோரிக்கை என்று தான் சொல்ல வேண்டும்.
பார்வதி மற்றும் கமருதீன் என இருவருக்கும் ரெட் கார்டு கொடுத்ததை ரசிகர்கள் நேற்று வரவேற்று இருந்தனர். ஆனால் தற்போது வந்த தகவலின்படி பார்வதி மற்றும் கம்ருதினுக்கு ரெட்கார்டு கொடுக்க வேண்டும் என்ற தீர்மானம் முதலாக இருக்கவில்லை கூறப்படுகின்றது.
அதாவது பார்வதிக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என்ற முடிவை தீர்மானித்தது விஜய் சேதுபதிதான் என்று கூறப்படுகிறது.

பார்வதிக்கும் கமருதீனுக்கும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டதற்கு மிகவும் முக்கியமான காரணமே இருவரும் இணைந்து, டிக்கெட் டூ ஃபினாலேவின் இறுதி டாஸ்க்கான கார் டாஸ்க்கில், சக போட்டியாளர் சான்ட்ராவை காருக்குள் இருந்து எட்டி உதைத்து வெளியே தள்ளினர்.
இது சக போட்டியாளர்கள் உள்ளிட்ட ரசிகர்கள் அனைவர் மத்தியிலும் மிகப்பெரிய பிரச்சனையாக வெடித்தது.
இதனால் இருவருக்கும் ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால் இந்த விடயத்தை பொறுத்த வரையில் சேனல் தரப்பில் இருந்து கமருதீனுக்கு மட்டும் ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பி விடலாம் என்ற முடிவு தான் இருந்துள்ளது.

ஆனால் விஜய் சேதுபதி தான் பிரச்சனையை சேனல் குழுவிடம் மிகவும் தெளிவாக பேசி உள்ளார். அதாவாது மருதீனை இத்தனை வாரங்களாக பார்த்து வருகிறோம், இப்படியான மோசமான செயலை செய்ய, பார்வதி தான் அவரைத் தூண்டி விட்டுள்ளார்.
கமருதீன் ஒரு ஆணாக இருந்து இதை செய்ததால் கமருதீனுக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என்றால், இப்படியான மோசமான சம்பவத்திற்கு தூண்டிய பார்வதிக்கும் ரெட் கார்டு கொடுப்பது தான் சரி என்று கூறியுள்ளார் இதனால் தான் நேற்று இரண்டு நபர்களுக்கும் ரெட் கார்ட் கொடுக்கபட்டுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |