திருமணமான 3 நாளில் பெண் மருத்துவர் ஹரிணி உயிரிழந்தது ஏன்? கலங்க வைக்கும் சம்பவம்

doctor dead madurai Villapuram harini
By Jon Mar 27, 2021 04:07 AM GMT
Report

திருமணம் முடிந்த மூன்று மாதத்தில் மதுரையை சேர்ந்த இளம் பெண் மருத்துவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் வில்லாபுரம் ஹவுசிங் போர்டு காலனியை சேர்ந்த டாக்டர் அசோக் விக்னேஷ் என்பவர் மதுரை அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் எம்.எஸ் 3 ஆம் ஆண்டு படித்துவந்த நிலையில், அதே அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் மயக்கவியல் துறையில் எம்.டி இரண்டாம் ஆண்டு படித்துவந்த மருத்துவர் ஹரிணி(26) என்பவருடன் காதல் ஏற்பட்டு, இவர்கள் இருவருக்கும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் இரண்டு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நடந்துள்ளது. காதலித்து திருமணம் செய்துகொண்ட புதுமண தம்பதியினர் இருவரும் தங்கள் புது வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்துவந்த நிலையில், ஹரிணிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் திடீர் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

இதனால் வீட்டில் இருந்தபடியே ஹரிணி சிகிச்சை மேற்கொண்டுவந்துள்ளார். இந்நிலையில் ஹரிணிக்கு உடல்வலி அதிகமான நிலையில், அவரது கணவர் மருத்துவர் என்பதால் அவரே தனது மனைவிக்கு வலிநிவாரணி ஊசி போட்டுள்ளார். வலி ஊசி போட்ட சிறிது நேரத்தில் ஹரிணி மயக்கமடைந்து சுருண்டு விழுந்துள்ளார். ம

னைவி திடீரெனெ மயங்கி விழுவதை பார்த்த அவரது கணவர், பதறிப்போய் உடனே மனைவியை மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தநிலையில் சிகிச்சை பலனின்றி ஹரிணி பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு எடுத்து செல்லப்பட்டநிலையில் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.

மேலும் திருமணம் ஆகி சில மாதங்களே ஆவதால் ஆர்டிஓ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஹரிணி எப்படி உயிரிழந்திருக்க கூடும் என மருத்துவர்கள் சில காரணங்களை கூறியுள்ளனர். அதன்படி, சில மருந்து மாத்திரைகள் ஒவ்வாமையை ஏற்படுத்தும். சில நேரங்களில் அதிதீவிர ஒவ்வாமையாக மாறி மூச்சுக்குழல் சுருங்கியும், இதய ஒட்டம் நின்றும் மரணம் நிகழும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

எனினும் ஹரிணி எப்படி இறந்தார் என்பது அவரது பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.  

மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US