மூளையின் ஆரோக்கியத்தை பாதிக்கும் உணவுகள்
உடலில் மிக முக்கியமான பகுதி தான் நமது மூளையாகும். ஆனால் சில பழக்கவழக்கங்களால் இதன் செயற்பாடு மங்கிப்போகிறது. நமது மூளை சுறுசுறுப்பாக இருப்பதற்கு நமக்கு தேவை முதலில் காலை உணவு தான்.
இந்த காலை உணவை நாம் எடுத்துக்கொள்ளாவிட்டால் மூளை அதன் சுறுசுறுப்பை இழக்கும். இதை தவிர சில உணவுப் பழக்க வழக்கங்களாலும் இந்த மூளையின் செயற்பாடு செயலிழக்கும். நாம் அன்றாடம் உண்ணும் உணவில் எந்த உணவின் மூலம் நமது மூளை செயலிழக்கிறது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
மனித மூளை
அடிக்கடி பயன்படுத்தக்கூடிய சக்கரை நிறைந்த பானங்களை நாம் குடிக்கும் பொழுது அது இரண்டாவது நீரழிவை தருவதுடன் இதய நோய் அபாயத்தையும் அதிகமாக்கும். இதனால் மூளையில் எதிர்மறை விளைவுகளும் வரலாம்.
நாம் உண்ணும் உணவில் அதிக அளவிலான சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளில் சர்க்கரைகள் மற்றும் வெள்ளை மாவு போன்ற அதிக பதப்படுத்தப்பட்ட தானியங்கள் அடங்குகின்றன.
இந்த உணவுகள் கார்போஹைட்ரேட்டுகள் பொதுவாக உயர் கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளன. இந்த உணவுகளால் உடலில் ரத்த சக்கரையின் அளவு அளவு அதிகரிக்கும்.
இன்சுலின் அளவுகள் அதிகரிக்கும். இதனால் தான் மூளையின் செயற்பாடும் மங்கிப்போகிறது .பலரும் அறியாத டிரான்ஸ் கொழுப்பு உணவுகள் இது இறைச்சி மற்றும் பால் போன்ற விலங்கு பொருட்களில் டிரான்ஸ் கொழுப்புகள் இயற்கையாகவே காணப்படுகின்றன.
ஆனால் தொழில்துறையில் உற்பத்தி செய்யப்படும் டிரான்ஸ் கொழுப்புகள், ஹைட்ரஜனேற்றப்பட்ட தாவர எண்ணெய்கள் உடலுக்கு தீங்கை தரும்.
முக்கிய காரணமாக பார்க்கப்படுவது பதப்படுத்தப்பட்ட உணவுகள் அதாவது சிப்ஸ், இனிப்புகள், உடனடி நூடுல்ஸ், மைக்ரோவேவ் பாப்கார்ன், கடையில் வாங்கும் சாஸ்கள் மற்றும் ரெடிமேட் உணவுகள் மூளையின் செயற்பாட்டை அதிகம் பாதிக்கும்.
அதிகளவிலான சக்கரையின் பயன்பாடு இது பல நோய்களை தருவதுடன் நமது மூளையை சோம்பேறியாக்கிறது. அறிவாற்றல் குறைக்கிறது. பல மக்களை மிகவும் பாதிப்பது மதுபானம் பாவிப்பது.
இது உடல் நலத்திற்கு மிகவும் கேடு விளைவிப்பதுடன் இதன் அதிகப்படியான நுகர்வு மூளையில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். முடிந்தவரை இந்த உணவுகளை முற்றிலும் தவிர்க்காவிட்டாலும் குழந்தைகளிடம் இருந்தும் உங்களிடம் இருந்தும் கொஞ்சமாக தள்ளி வையுங்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |