Corn Soup: நாவிற்கு சுவையான சோளம் சூப்- ஒரு முறை குடித்தால் இத்தனை பலன்களா?
பொதுவாக சந்தையில் சோளம் விலை மலிவாக இருக்கும் போது அதனை அநேகமானவர்கள் கொள்வனவு செய்து பல வகையான உணவுகளை செய்து கொடுப்பார்கள்.
அந்த வரிசையில் சோளத்தை வாங்கி அதனை குழந்தைகளுக்கு அவித்து மாத்திரம் கொடுக்காமல் கொஞ்சம் வித்தியாசமாக சூப் செய்து கொடுக்கலாம்.
இந்த சூப்பை மாலைவேளைகளில் கொடுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
சோளம் சூப் குடிப்பதால் குழந்தைகளுக்கு வயிறு நிறைவோடு இருக்கும். அத்துடன் பல்வேறுப்பட்ட ஆரோக்கிய பலன்களும் கிடைக்கின்றன.
அந்த வகையில், குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் சுவையான சோளம் சூப் எப்படி தயாரிக்கலாம் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கார்ன் - 1/2 கப்
- பால் - 1/2 கப்
- மிளகுத் தூள் - 1/2 டீஸ்பூன்
- தண்ணீர் - 1/2 கப்
- சோள மாவு - 1/2 டீஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
சூப் செய்முறை
முதலில் சோளத்தை சுத்தம் செய்து தனியான ஒரு பவுலில் போட்டு வைத்து கொள்ளவும்.
பின்னர் குக்கரில் போட்டு, தண்ணீர் ஊற்றி 5-6 விசில் விட்டு மென்மையாக வேக வைக்கவும்.
வெந்தவுடன்சோள மணிகளை உதிர்த்து, அதனை மிக்ஸியில் போட்டு, 1/4 கப் தண்ணீர் விட்டு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.
இதனை தொடர்ந்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அரைத்து வைத்திருக்கும் சோளக்கலவையை 3 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்கவும்.
1/4 கப் தண்ணீரில் சோள மாவை கலந்து விடவும்.
கடைசியாக சோளம் கலவையுடன் பால் சேர்த்து கெட்டியாகும் வரை மிதமான சூட்டில் கொதிக்க விடவும்.
பின்னர் மிளகுத் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து பரிமாறினால் கார்ன் சூப் தயார்!
புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுப்பது முதல் எடை குறைப்பு வரை: ப்ரோக்கோலி சூப்பின் அற்புத நன்மைகள்
சோளம் சூப் குடிப்பதால் கிடைக்கும் பலன்கள்
1. சந்தையில் கிடைக்கும் காய்கறிகளை விட சோளத்தில் அதிகப்படியான ஊட்டசத்துக்கள் கிடைக்கின்றன. இந்த சோளத்தினால் சேதமடைந்த செல்கள் புதுப்பிக்கப்படுகின்றன.
2. இதய நோய்,புற்றுநோய் மற்றும் பிற நோய்களில் இருந்தும் பாதுகாக்கும் ஆற்றல் சோளத்திற்கு இருக்கின்றன. கோதுமை,அரிசியை விட சோளத்தில் ஆன்டி-ஆக்ஸிடென்ட் அதிகம் உள்ளது.
3. சோளத்தில் கரோடெனாய்டுகள் ,வைட்டமின்-சி மற்றும் வைட்டமின்-இ சத்துக்கள் உள்ளன. இது கண்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது.
4. சோளத்தில் அதிகப்படியான கலோரிகள் உள்ளன. இதனால் குழந்தைகளுக்கு வாரத்திற்கு இரண்டு தடவைகள் சூப் செய்து கொடுக்கலாம். அவர்களின் வளர்ச்சி இன்னும் அதிகமாகும்.
5. சோளத்தில் அதிக அளவு ஊட்டச்சத்து இருப்பதால் டயட் பிளான்களில் இருப்பவர்கள் சேர்த்துக் கொள்ளலாம்.
6. சிலருக்கு மலச்சிக்கல் பிரச்சினை தீவிரமாக இருக்கும். சில சமயங்களில் இருதயம் சம்பந்தப்பட்ட நோய்களும் வரலாம். சோளம் சூப் குடிப்பதால் இது போன்ற நாள்பட்ட நோய்கள் குணமாகும். ஏனெனின் சோளத்தில் 14% வைட்டமின்-சி யும்,12% மங்கனீசும் உள்ளது.
7. எடை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள் பழங்கள் மற்றும் காய்கறிகள் சாப்பிடுவதை விட சோளத்துடன் தொடர்புப்பட்ட உணவுகளை சாப்பிடலாம். இது இலகுவாக எடையை குறைக்கும். ஏனெனின் சோளத்திற்கு செரிமானத்தை சீர்ப்படுத்தும் ஆற்றல் உள்ளது.
8. சோளத்தை மற்ற உணவுகளுடன் கலந்து சாப்பிடுவதை விட சூப்பாக செய்து குடித்தால் ஏகப்பட்ட உடல் ஆரோக்கியத்தை பெறலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |