காலை வெறும் வயிற்றில் ஊற வைத்த பாதாம் சாப்பிடுங்க: அதிசயத்தை கண்கூடாக பார்ப்பீங்க
காலை வெறும் வயிற்றில் ஊற வைத்த பாதாம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பாதாம்
நட்ஸ்கள் நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மையளிப்பது மட்டுமின்றி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கின்றது.
அதிக சத்துக்களைக் கொண்ட நட்ஸ்களில் ஒன்று தான் பாதாம் ஆகும். பாதாவை சிறுவயது முதலே சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது. மூளையை கூர்மையாக்கும் என்றும் கூறுகின்றனர்.
அதிலும் இரவு முழுவதும் நீரில் ஊற வைத்த பாதாமை காலை வெறும்வயிற்றில் சாப்பிட்டு வந்தால் பல கடுமையான பிரச்சினைக்கும் தீர்வு அளிக்குமாம்.
பயன்கள் என்ன?
தினமும் காலை வெறும்வயிற்றில் ஊற வைத்த பாதாமை சாப்பிட்டு வந்தால் செரிமான பிரச்சனையிலிருந்து விடுபடவும், செரிமான அமைப்பை வலுப்படுத்தவும் முக்கிய பங்கு வகிக்கின்றது.
வறண்ட சரும பிரச்சனைகளிலிருந்து நிவாரம் அளிப்பதுதுடன், சமருமம் தொடர்பான நோய்களுக்கும் தீர்வு அளிக்கின்றது. அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் உள்ளதுடன், முகத்தில் பொலிவும் அதிகரிக்கும்.
நார்ச்சத்து நிறைந்து காணப்படும் பாதாம் எடை இழப்பிற்கு பெரிதும் உதவுகின்றது. அதாவது நீண்ட நேரம் பசி எடுக்காமல் வயிறு நிரம்பி இருப்பதால், அதிகமாக உணவு எடுத்துக் கொள்வதை தவிர்க்கின்றது. பாதம் சாப்பிடுவது வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்தும் மற்றும் உடல் கொழுப்பை விரைவாக குறைக்கும்.
ரத்த சர்க்கரை நோய் இருந்தால் தினமும் காலையில் ஊற வைத்த பாதாமை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நன்மை பயக்கும். நீரிழிவு நோயாளிகளுக்கு மெக்னீசியம் குறைபாடு காரணமாக இன்சுலின் எதிர்ப்பு அதிகமாவதால், சர்க்கரை அளவு அதிகமாகும். இத்தகைய பிரச்சனைக்கு பாதாம் நல்ல தீர்வு கொடுக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |