துரோகத்தின் முதல் விதை! போலி முகத்தினை காட்டும் உறவுகள்
இன்றைய காலத்தில் போலி முகத்தினை வைத்து உலாவரும் உறவுகள் குறித்த கட்டுரையை இங்கே காணலாம்.
போலி உறவுகள்
முந்தைய காலத்தில் உறவுகளில் போலி என்ற பேச்சுக்கே இடம் இல்லாமல் இருந்தது. ஆனால் தற்போது உணவுப்பொருட்களைப் போன்று உறவுகளிலும் அதிக கலப்படம் காணப்படுகின்றது.
மற்றவர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் ஓடிச்சென்று உதவி செய்யும் காலத்தினை இழந்த நாம், தற்போது தலைகீழாக மாறி நிற்கிறோம்.
ஆம் தற்போது யாரும் தானாக வந்து உதவி செய்வதில்லை. காரணம் அதீத வளர்ச்சியின் காரணமாக பணம் சம்பாதிப்பதற்காக ஓடிக் கொண்டிருக்கின்றனர்.
ஒருபுறம் தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரித்து வரும் நிலையில் மற்றொரு புறம் மனிதநேயம் மாண்டு போய்விடுகின்றது. ஒரு சில குடும்பங்களில் உறவுகளே போலியாக வேஷமிட்டு, சொத்துகளை பறித்து செல்லும் உலகமாக மாறியுள்ளது.
மேலும் ஒரு காரியம் ஆக வேண்டும் என்றால் உறவுகள் நம்மைச் சுற்றி வட்டமிடுவார்கள். அதுவே அந்த காரியம் முடிந்துவிட்டது என்றால் காக்கா கூட்டம் போன்று கலைந்து சென்றுவிடுவார்கள். பின்பு தனிமையாக நிற்பது தான் தற்போதைய வாழ்க்கை.
உறவுகள் அனைத்தும் நிஜமா?
இன்றைய காலத்தில் உறவுகள் அனைத்தும் நிஜமா? நிஜமான பாசத்தோடு தான் பழகுகின்றனரா? அல்லது போலியான பாசத்தில் உறவுகளை தொடர்கின்றனரா? என்பதை நாட்கள் செல்ல செல்ல நாம் புரிந்து கொள்வோம்.
ஆனால் இந்த காலத்தில் உறவுகள் என்றால் தூரத்தில் இருந்தே காணப்படுகின்றனர். ஏதேனும் விசேஷம் என்றால் மட்டும் ஒன்று சேரும் உறவுகள் பின்பு எந்தவொரு பேச்சு வார்த்தையும் இல்லாமல் இருக்கின்றனர்.
ஆனால் அக்காலத்தில் அவ்வாறு அல்ல... மனதில் பட்டதை வெளிப்படையாக பேசும் குணம் கொண்டவர்களாகவே இருப்பதுடன், மற்றவர் வீட்டு விசேஷம், கெட்ட நிகழ்வு என்பதற்கு முழு ஈடுபடுடான் இருந்தனர். இக்காலத்தில் மனதில் ஒன்றை வைத்துக்கொண்டு வெளியே வேறு பேசும் உறவுகளாகவே இருப்பதுடன் இதுவே சிக்கலை ஏற்படுத்துகின்றது.
நீங்கள் பழகும் உறவுகளிலும் போலி முகங்கள் இருக்கவே செய்யும். ஆகையால் உறவினர்களிடம் பேசும் போது இடம், பொருள், ஏவல் அறிந்து பேசுவது நல்லது.
போலி உறவுகளின் தத்துவங்கள்
கண்மூடித்தனமாக ஒருவரை நேசித்துவிட்டால், அவர்கள் கூறும் பொய்கள் கூட உண்மையாகவே தெரிகின்றது.
துரோகத்தின் முதல் விதை அதிகபட்ச நம்பிக்கையால்தான் தூவப்படுகிறது.
ஒருவரை மன்னித்துவிடும் அளவிற்கு நல்லவராக இருங்க.. ஆனால் அவரை மீண்டும் நம்புமளவிற்கு முட்டாளாக இருக்காதீர்கள்.
நீ கேட்டு வாங்கும் அன்பு கடைசி வரை வருவதில்லை.
நிரந்தரம் இல்லாத உலகம், யாரும் யாருக்காகவும் இல்லை என்பது மட்டும் நிஜம்.
சில உறவுகள் நம்முடன் இருப்பதை விட விலகிச்செல்வதே நல்லது.
படிப்பு கற்றுத் தருவதை விட சிலரின் நடிப்பு வாழ்க்கையை சிறப்பாக கற்றுத்தரும்.
அன்பானவர்களுக்காக இறங்கி போவது தவறில்லை... நம் அன்பு புரியாதவர்களிடத்தில் விலகி போவதும் தவறில்லை.
தாகம் தீரும் வரை தான் நீருக்கு மதிப்புஇருக்கும். சில உறவுகளுக்கு தேவை இருக்கும் வரை தான் பாசமும் இருக்கும்.
தனிமை எதை புரிய வைக்குதோ இல்லையோ இவ்வளவு நாள் எவ்வளவு பெரிய முட்டாளா இருந்து இருக்கோம்னு புரிய வைத்துவிடும்.
உன்னிடம் அன்பாக பேசும் அ னைவருமே, உண்மையாக உன் மீது அன்பு வைத்துள்ளார்கள் என நினைக்காதே ... அந்த போலி அன்பிற்கு பின்னால் அவர்களுக்கான தேவை உன்னிடம் இருக்கிறது என்பதை நீ மறந்துவிடாதே.
நேசிக்க தெரியாத மனிதர்களிடம் நேசத்தை எதிர்பார்ப்பது முட்டாள்தனம்.
ஒருவரின் அன்பு பொய்தான் என்று தெரிய வரும்போது, அத்தனை நாள் பழக்கமும் அரை நொடியில் அர்த்தமற்று போகிறது.