காலிஃப்ளவர் வாங்கும் இதை முக்கியமாக கவனிச்சிக்கோங்க... வயிற்றுக் கெடுதல் ஏற்படுமாம்
காலிஃப்ளவர் வாங்கும் போது அதனை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
காலிப்ளவர் வாங்கும் பொழுது ஒரு சில பேருக்கு எப்படி பார்த்து வாங்க வேண்டும் என்று தெரியாமல் இருக்கும். ஒரு சில காலிஃப்ளவரில் புழுக்கள் அதிகமாகவும், பூக்கள் குறைவாகவும் இருக்கும். ஆனால் நல்ல காலிஃப்ளவரை எப்படி பார்த்து வாங்கி சமையலுக்கு பயன்படுத்த வேண்டும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
காலிஃப்ளவர் நீங்கள் வாங்கும் போது எவ்வளவு பெரிய பூவாக இருக்கின்றது என்று பார்க்காமல், அடர்த்தியாக, ஒன்றோடு ஒன்று நெருக்கமாக இருக்க வேண்டும். ஒன்றை ஒன்று நாம் பிரிக்க முடியாத அளவிற்கு கட்டியாக இருக்க வேண்டும்.
பின்பு பூவின் நிறத்தினை கட்டாயம் பார்க்க வேண்டும். புதிதாக உள்ள காலிஃப்ளவர் என்றால், வெளிர் மஞ்சள் நிறமாகவோ அல்லது க்ரீமி வெள்ளை நிறத்தில் இருக்கின்றதா என்று கவனித்து வாங்கவும்.

image: istock
பூக்கள் நன்றாக விரிந்தோ, பூக்களின் மொட்டுகளுக்கு இடையே இடைவெளி இருந்தால் அது பழைய காலிஃப்ளவர் என்று அறிந்து கொள்ளவும்.
இவ்வாறு பூக்கள் விரிந்திருந்தால் புழுக்களும் அதிகமாக இருப்பதுடன், சீக்கிரமாக கெட்டுப்போகவும் செய்யும். சமைக்கும் போது ருசியும் இருக்காது.

காலிஃப்ளவரை விவசாயம் செய்து அதனை அறுவடை செய்யும் வரை பல பூச்சிக்கொல்லிகள் அடிப்பதுடன், இதற்குள் அதிகமான புழுக்களும் இருக்கும். ஆதலால் சமைக்கும் முன்பு பூக்களை நன்றாக பிரித்து, உப்பு கலந்த வெந்நீரில் சேர்த்து 5 நிமிடம் ஊற வைத்த பின்பே சமைக்க வேண்டும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |