ஜனனியிடம் முகத்தை காட்டும் சக்தி.. தர்ஷினியின் ஏமாற்றம்- இனி நடக்கப்போவது என்ன?
குணசேகரன் வலையில் இருக்கும் சக்தி, ஜனனி செய்யும் வேலைகளை பார்த்து அவருக்கு ஒரு எச்சரிக்கை விடுகிறார்.
எதிர்நீச்சல்
பிரபல தொலைக்காட்சியில் எதிர்நீச்சல் சீரியல் பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகின்றது.
குடும்பத்தில் அடிமையாக இருக்கும் பெண்கள், அவர்களை அடக்கி ஆழ நினைக்கும் ஆண் ஆதிக்கம் கொண்ட கணவர்கள் என்ற கருப்பொருளை வைத்தே கதைக்களம் நகர்ந்து கொண்டிருக்கிறது.
அந்த வகையில், தன்னுடைய அண்ணன் குணசேகரனுக்காக தம்பிகள் தங்களின் மனைவிகளை வெளியில் அனுப்பியுள்ளனர். மரியாதை இல்லாத இடத்தில் இனி வாழ முடியாது என அவர்களும் கோயிலில் சென்று அமர்ந்திருக்கிறார்கள்.
அவர்களை வீட்டுக்குள் கொண்டு வர குணசேகரன் புது திட்டம் போட்டுள்ளார்.
அதாவது தன்னுடைய அம்மாவுக்கு விஷம் கொடுத்து அவரை படுத்த படுக்கையாக்கி, மருமகள்களின் நட்பை பிரிக்க நினைக்கிறார்.
கொந்தளிக்கும் சக்தி
இந்த நிலையில், சக்தி- ஜனனி இருவரும் தங்களுக்குள் இருந்த காதல் பிளவுப்பட்டு, தற்போது காதல் இருந்தும் வெளிக்காட்ட முடியாமல் வேதனையுடன் இருக்கிறார்கள்.
இப்படியொரு சமயம் பார்த்து, நந்தினி- கதிர், ஞானம்- ரேனுகா ஆகிய இரண்டு தம்பதிகளும் ஒன்று சேர்ந்துள்ளனர். ஆனால் ஜனனி மற்றும் ஈஸ்வரி வாழ்க்கையில் பாரிய விரிசல் ஏற்பட்டுள்ளது.
இப்படியொரு சமயத்தில் ஜனனி- சக்தி இருவருக்கும் இடையில் கடந்த சில எபிசோட்களில் பார்க்கும் பொழுது பாரிய சிக்கல்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அதற்கு நடுவில் குந்தவை என்ற பெண்ணும் இருக்கிறார்.
ஜனனி செய்வதை அறிந்து கடுப்பான சக்தி, “நீ செய்றது எல்லாத்தையும் கேட்காமல் இருப்பதற்கா நீ ஓவராக எடுக்காத, நீ செய்றது தப்புன்னு தெரிந்தால் கேட்பேன்..” எனக் கூறுகிறார். சக்தி இப்படி பேசுவது மற்றும் நடந்து கொள்வது வீட்டிலுள்ள அனைவருக்கும் வியப்பாக உள்ளது.
மருமகள்கள் தைரியமாக இருந்தால் அடுத்து வரும் பிள்ளைகளும் தைரியமாக இருக்கலாம் என எதிர்ப்பார்க்கும் பொழுது, வீட்டிலுள்ள மருமகள்கள் குடும்பத்தினருக்காக யோசித்து எதையும் சரியாக செய்யாமல் தள்ளிப்போடுகிறார்கள். இதனால் தர்ஷினியும் கடுப்பாகியுள்ளார்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |