Food recipe: இலங்கையர் விரும்பி சாப்பிடும் சோயா சங்க்ஸ் வறுவல்- சிக்கன் சுவையில் செய்வது எப்படி?
இலங்கையில் வாழும் மக்களின் உணவுகள் இந்தியர்களின் உணவை விட வேறுப்பட்டதாக இருக்கும்.
இலங்கையர்கள் அதிகமாக தேங்காய் சம்பல், சோயா சங்கஸ் மற்றும் பருப்பு கறி உள்ளிட்ட உணவுகளை தான் விரும்பி சாப்பிடுவார்கள்.
சோயா சங்கஸ் எனப்படும் மீல் மேக்கரில் சிக்கன் வறுவலுக்கு இணையான வறுவலாகும்.
அந்த வகையில், சிக்கன் சுவையில் வீட்டிலுள்ளவர்களுக்கு செய்து அசத்துவது எப்படி என்பதனை பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
• சோயா சங்க்ஸ் அல்லது மீல் மேக்கர் – 100 கிராம்
• சீரகம் – ஒரு ஸ்பூன்
• சோம்பு – ஒரு ஸ்பூன்
• மிளகு – ஒரு ஸ்பூன்
• வர மல்லி – ஒரு ஸ்பூன்
• ஏலக்காய் – 1
• பட்டை – 1
• வர மிளகாய் – 6
• கல்பாசி – சிறிதளவு
தாளிக்க தேவையான பொருட்கள்
• எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
• சீரகம் – கால் ஸ்பூன்
• சின்ன வெங்காயம் – 6 (பொடியாக நறுக்கியது)
• கறிவேப்பிலை – ஒரு கொத்து
• வர மிளகாய் – 4
• மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
• கஷ்மீரி மிளகாய்த் தூள் – ஒரு ஸ்பூன்
• மல்லித் தூள் – அரை ஸ்பூன்
• உப்பு – தேவையான அளவு
• இஞ்சி – பூண்டு பேஸ்ட் – அரை ஸ்பூன்
• மல்லித்தழை – சிறிதளவு
சோயா சங்க்ஸ் வறுவல் செய்வது எப்படி?
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும், சீரகம் போட்டு தாளிக்கவும். அதன் பின்னர், சின்ன வெங்காயம், வர மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது ஆகியவற்றை சேர்த்து பச்சை வாசம் வரும் வரை வதக்கவும்.
அடுத்து, மஞ்சள் தூள், கஷ்மீரி மிளகாய்த் தூள், மல்லித் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும். அதனுடன் ஊறிய சோயா சங்க்ஸ்களை பிழிந்து போட்டு கலந்து விடவும்.
அரைத்து வைத்துள்ள ஃபிரஷ்ஷான மசாலாப் பொடி மற்றும் அரை டம்பளர் தண்ணீர் ஊற்றி நன்றாக சோயாவை கலந்து விட்டு மூடி விடவும்.
தண்ணீர் சுத்தமாக வற்றியவுடன் மல்லித்தழை தூவி இறக்கி விட்டால் சூப்பர் சுவையான சோயா வறுவல் தயார்! இதனை சப்பாத்தி அல்லது சூடான சாதத்துடன் கலந்து சாப்பிடலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |