“ஏ பொண்டாட்டிய தொட்டால் வெட்டுவேன்” அரண்டு நின்ற குணசேகரன்! வீட்டை விட்டு போவாரா ஜனனி?
எதிர்நீச்சல் சீரியலில் ஜனனியை அடிக்க வந்த கதிரை அடித்து விட்டு குணசேகரனை கொன்று விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.
எதிர்நீச்சல்
பிரபல தொலைக்காட்சியில் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தில் சென்று கொண்டிருக்கும் சீரியல் தான் எதிர்நீச்சல்.
விசாலாட்சி நடுவீட்டில் அமர்ந்து அழுது கொண்டிருக்கும் போது தம்பிகளுடன் வீட்டிற்குள் நுழைந்த குணசேகரன் “தங்கச்சி திருமணம் நல்லதாக முடிந்தது” என சாமி கும்பிட்டு கொண்டு சந்தோசப்பட்டு கொண்டார்.
இதனை பொருத்து கொள்ள முடியாத விசாலாட்சி,“ ஆதிரையை எங்கே..?” என கேட்டார். அதற்கு குணசேகரன் திமிராக ஒரு பதில் கூறுகிறார். இவரின் அக்கிரமங்களை பொருத்து கொள்ள முடியாமல் “என் மக வாழ்க்கையை நாசமாக்கிட்டா..” என அழுகிறார்.
இதனை பார்த்த குணசேகரன்,“ நீங்க இப்படி நடந்து கொள்வதற்கு அந்த மெட்ராஸ்காரி தான் காரணமா? இது குணசேகரன் வீடு இங்க நா சொல்ற மாதிரி தான் இருக்குணும்.” என அனைவருக்கும் சாடையாக கூறியுள்ளார்.
குணசேகரனை கொலை செய்ய துணிந்த சக்தி
இந்த நிலையில் ஜனனியும் கதிரும் வீட்டிற்குள் நுழைகிறார்கள். அப்போது வழமைப் போல் கதிர் ஜனனியை பார்த்து ,“ நீ வெளியே போடி..” என கூறுகிறார்.
இதனை பார்த்து கொண்டிருந்த குணசேகரன் - ஜனனியை பார்த்து,“ நீ தோற்று போய்ட்ட..” என கூறி நக்கலாக பேசுகிறார். கதிர் பாய்ந்தப்படி “நீ வெளியே போடி மோத..” என கூறுகிறார்.
இதனை பொருத்து கொள்ளாத சக்தி கதிரின் கன்னத்தை பதம் பார்த்து விட்டார். இதன் பின்னர், “ ஏ பொண்டாட்டி மேல யார் கை வைத்தாலும் வெட்டுவே..” என தைரீயமாக குணசேகரனை பார்த்து கூறுகிறார்.
சக்தியின் இன்னொரு முகத்தை பார்த்து குணசேகரன் அப்படியே அரண்டு நிற்கிறார். இனி வரும் எபிசோட்கள் பரபரப்பாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள்.