குணசேகரின் சூழ்ச்சியால் படுத்த படுக்கையான அருண்..! நடந்தது என்ன? குழப்பத்தில் ஜனனி
குணசேகரின் சூழ்ச்சியால் ஆதரையை திருமணம் செய்து கொள்ளவிருந்த அருண் தற்போது படுத்த படுக்கையாக இருக்கிறார்.
எதிர்நீச்சல்
பிரபல தொலைக்காட்சியில் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தில் ஓடும் சீரியல் தான் எதிர்நீச்சல்.
இந்த சீரியலில் ஒரு குடும்பத்தில் பெண்களை அடிமையாக்கி கணவர்கள் செய்யும் சேட்டைகளை அழகாக காட்டி வருகிறார்.
இந்த சீரியலில் பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இதன்படி, குணசேகரனாக நடிக்கும் கதாபாத்திரத்திற்கு மக்கள் மத்தியில் பெரிய மவுசு இருக்கிறது.
மேலும் எதிர்நீச்சல் என்றாலே டுவிஸ்ட்கள் நிறைந்திருப்பதால் அடுத்தடுத்து என்ன திருப்பங்கள் வரப்போகிறது என்பதை காண ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.
உயிருக்காக போராடும் அருண்
இந்த நிலையில் ஆதரை அருண் என்பவரை காதலித்து வந்தார். இந்த விடயத்தை தெரிந்து கொண்ட குணசேகரன் இந்த திருமணத்தை வைத்து தன்னுடைய எதிரியை பலிவாங்க வேண்டும் என நினைத்து திருமணம் வரை கொண்டு வந்து திருமணத்தை நிறுத்தி கரிகாலனுக்கு ஆதரை திருமணம் செய்து வைத்துள்ளார்.
ஆனால் இந்த திட்டத்தை முறியடிக்க வேண்டும் என ஜனனி -சக்தி தீவிர முயற்சி செய்தார்கள். ஆனால் அவர்களால் இதனை சரியாக செய்து முடிக்க முடியவில்லை.
ஜனனியின் ஆண் நண்பரான கௌதம் முன் வந்து அருணை பார்த்து கொள்வதாக கூறி அருணை படுத்த படுக்கையாக்கியுள்ளார். இதற்கு பின்னால் என்ன இருக்கின்றது என்பது சரியாக தெரியவில்லை.
அருண் மருத்துவமனையில் உயிருக்கு போராடி கொண்டிருக்கிறார். கரிகாலனுடன் வாழ முடியாது என நினைத்து வாழ்க்கைக்காக போராடி கொண்டிருக்கிறார்.
இப்படியான ஒரு நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.