Ethirneechal: வெளிவந்த பலநாள் உண்மை... ராவணன் ஆதிமுத்துவின் மனைவி யார்?
எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் விட்டுச்சென்ற வன்மம் தற்போது ராவணன் என்ற பெயரில் தொடங்கி சீரியலுக்கு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்நீச்சல் சீரியல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் இன்றைய புதிய ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.
அவ்வப்போது பல திருப்பங்களை கொண்டு ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலை மக்களிடையே மிகவும் பிரபலமாகியுள்ளது.
ஈஸ்வரியை அடித்து மருத்துவமனையில் போட்ட குணசேகரன் தற்போது ஜாமீனில் வந்துள்ள நிலையில், ஈஸ்வரியும் பழைய நினைவுகளை மறந்துள்ளார்.
இதனால் குணசேகரன் எந்தவொரு பயம் இல்லாமல் ஈஸ்வரியிடம் மரியாதையாகவும், பாசமாகவும் நடந்து வருகின்றார்.
இந்த நிலையில் எதிர்நீச்சல் சீரியலில் புதிய வில்லனாக ராவணன் ஆதிமுத்து வருகிறார். கலெக்டர் மதிவதனி ஜனனியிடம் ஒரு கொடூரமான ஒருவன் வரப்போகிறான் என்று கூறியுள்ளார்.

மனைவி யார்?
ஜனனியிடம் இவ்வாறு பேசிய மதிவதனியிடம் மகள் வந்து பேசுகின்றாள். தான் பெரிய பெண்ணாகிவிட்டேன் எனவும் ஏன் தன்னிடம் எதையும் கூற மாட்டிகிறீர்கள் என்று கேள்வி எழுப்புகின்றார்.
அதுமட்டுமின்றி நீங்களும் அப்பாவும் ஏன் தனியாக வாழ்கின்றீர்கள் என்று கேட்டுள்ளார். மேலும் தனது கையில் ஒரு புகைப்படத்தை எடுத்து வந்து மதிவதனியிடம் காட்ட அவர் பயங்கர அதிர்ச்சியில் காணப்படுகின்றார்.
மதிவதினி கூறிய மிகப்பெரிய வில்லன் ராவணன் என்று காட்டப்படும் நிலையில், அந்த ராவணனின் மனைவியே இந்த மதிவதினி தான் என்பது புகைப்படத்தின் மூலமாக தெரியவந்துள்ளது.
ராவணனின் வருகை, மதிவதினியின் கணவரின் ட்விஸ்ட் என அடுத்தடுத்து பல திருப்பங்களை குறித்த சீரியல் கொண்டு செல்கின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |