இடது கால் நீக்கப்பட்ட நிலையில் பிரபல காமெடி நடிகர்! வெளியான புகைப்படம்
பிரபல நகைச்சுவை நடிகர் சிரிக்கோ உதயா நீரிழிவு நோய் காரணமாக தனது இடது காலை அகற்றியுள்ள நிலையில், சில பிரபலங்கள் நேரில் சென்று நலம் விசாரித்துள்ளார்.
நடிகர் சிரிக்கோ உதயா
பிரபலமான லொள்ளு சபா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற நிகழ்ச்சியாகும். இதில் நடித்துள்ள பெரும்பாலான நபர்கள் தற்போது காமெடி நடிகர்களாகவும், கதாநாயகனாகவும் நடித்து வருகின்றார்.
இந்த நிகழ்ச்சியில் நடித்தவர்களின் ஒருவர் தான் சிரிக்கோ உதயா. காமெடி ரோலிலும், குணச்சித்திர ரோலிலும் நடித்து பிரபலமானார்.
பல படங்களுக்கு காமெடி காட்சிகளுக்கு வசனங்கள் எழுதி கொடுத்துள்ளதுடன், வயலின் கலைஞராகவும் சினிமாவில் ஜொலித்தவர்.
நடிகர் சந்திரபாபுவின் மகனான இவர், கிட்டத்தட்ட 35 ஆண்டுகளாக சினிமாவில் இருந்து வருகின்றார்.
மருத்துவமனையில் சிகிச்சை
கனா காணும் காலங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார். இந்நிலையில் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்ட சிரிக்கோ உதயா சென்னை ஓமந்தூரர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
தற்போது அவரது இடது காலை எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. இவரது மகன் கூறுகையில், கடந்த சில மாதங்களாக அப்பா உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தார்.
நோயின் தாக்கத்தினால் இடது காலில் முட்டுக்கு கீழ் பகுதி முழுவதும் அறுவை சிகிச்சை மூலமாக எடுக்க வேண்டியுள்ள நிலையில், தற்போது அப்பா நன்றாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
மருத்துவனையில் சிகிச்சை பெற்று வரும் சிரிக்கோ உதயாவை நடிகர்கள் முத்துக்காளை, கிங்காங் அகியோர் நேரில் சென்று சில உதவிகளை செய்துள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |