நீங்க சாதாரண நடிகர்.... அரங்கத்தில் குணசேகரனிடம் எகிறிய ஜோதிடர்! கடுமையான வாக்குவாதம்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்துவரும் நடிகர் மாரிமுத்து ஜோதிடர்களை கடுமையாக விளாசியுள்ளார்.
ஜோசியர்களை விளாசிய மாரிமுத்து
எதிர்நீச்சல் சீரியலின் டிஆர்பி-க்கு குணசேகரன் தான் முக்கிய காரணம். அந்த அளவிற்கு நடிப்பிலும், பேச்சிலும், அதைவிட 'ஏய்.. இந்தாம்மா' என அவர் கூறும் வாரத்தை தான் ஹைலைட்.
இது பல மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு தீனியும் போட்டு வருகின்றது. மாரிமுத்து நடிகர் ஆவதற்கு முன்பு துணை இயக்குனராக ராஜ்கிரண், மணிரத்னம், எஸ்ஜே சூர்யா உள்ளிட்ட பலருடன் பணியாற்றியுள்ளார்.
சமீபத்தில் வேறொரு ரிவியில் நடைபெற்ற ரியாலிட்டி நிகழ்ச்சியான தமிழா தமிழா-வில் கெஸ்ட் ஆக கலந்து கொண்டிருந்தார். ஜோதிடர்கள் மற்றும் அதனை எதிர்ப்பவர்கள் என்ற தலைப்பில் விவாதம் சென்று கொண்டிருந்தது.
கெஸ்டாக வந்த மாரிமுத்து ஜோதிடர்களை கடுமையாக விளாசியுள்ளார். 'இந்தியா முன்னேறாமல் இருக்க நீங்க தான் காரணம். ஜோதிடத்தை பார்ப்பவரையும், கூறுபவரையும் மன்னிக்கவே முடியாது.
அதுமட்டுமில்லாமல் அவர் கேட்ட கேள்வி, அனைத்தும் ஒட்டுமொத்த பார்வையாளர்களின் கேள்வியாகவே இருந்தது என்று கூறலாம். அவர் பேசியதற்கு ஆவேசப்பட்ட ஜோதிடர் ஒருவர், குணசேகரனை சரமாரியாக பேசியுள்ளார். இதற்கு தனது பாணியில் தோரணையாக மாரிமுத்தும் பதில் அளித்துள்ளார்.
தரமான பதில்கள்....
— பாக்டீரியா (@Bacteria_Offl) July 23, 2023
குறிப்பா ரஜினிய வச்சி பேசினது Validஹான point....
உழைப்பில்லனா இங்க ஒரு மண்ணுமில்ல...
நாத்திகம் மக்களை தெளிவுபடுத்த அவசியமானது...
அத சரியா பேசும் போது மக்கள சிந்திக்க வைக்கும்..
That last Punch ❤❤❤❤??? pic.twitter.com/21IwXKYBq6
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |