காவல்நிலையத்திலிருந்து மனமுடைந்து வெளிவந்த குணசேகரன்.. அடுத்தடுத்து ஆப்பு வைத்த ஜீவானந்தம்
எதிர்நீச்சல் சீரியலில் அனைவருக்கும் பிடித்தமான நடிகராக வலம்வரும் குணசேகரன் மனமுடைந்த நிலையில், காவல்நிலையத்திலிருந்து வெளியே வரும் காட்சி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் பல திருப்பங்கள் அரங்கேறி வருகின்றது. சமீபத்தில் எதிர்பாராத விதமாக ஆதிரை கரிகாலன் திருமணம் நடைபெற்றுள்ளது.
பெண்களின் அடிமைத்தனத்தை மையமாக எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியல் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.
மற்றொரு புறம் வீட்டில் அப்பத்தாவின் சொத்து பிரச்சினையும் சென்று கொண்டிருந்த நிலையில், அப்பத்தாவின் 40 சதவீதம் ஷேர் தற்போது ஜீவானந்தத்திற்கு சென்றுள்ளது.
இதனை சற்றும் எதிர்பார்க்காத குணசேகரன், ஜனனி பெரும் அதிர்ச்சியில் காணப்படுகின்றனர். கடைசியில் ஏற்பட்ட மோதலில் குணசேகரனை அலுவலகத்திலிருந்து குண்டுகட்டாக வெளியேற்றப்பட்டார்.
தற்போது காவல்நிலையம் வரை இந்த பிரச்சினையில், குணசேகரன் தனது பக்க நியாயத்தை கூறியும் ஏற்றுக்கொள்ளாமல் தோல்வியுடன் வெளியேறியுள்ளார்.
எப்பொழுதும் கம்பீரமாக வலம்வரும் குணசேகரன் இந்த ப்ரொமோ காட்சியில் சோகமாக வந்துள்ளது ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |