எதிர்நீச்சலில் கை நழுவி சென்ற அப்பத்தாவின் சொத்து... அதிர்ச்சியில் குணசேகரன்! கொந்தளிப்பில் ஜனனி
எதிர்நீச்சல் சீரியலில் அப்பத்தாவின் சொத்து ஜீவனந்தத்திற்கு சென்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியல் மக்களிடையே அமோக வரவேற்பினை பெற்று வருகின்றது. பெண் அடிமைத்தனத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்த சீரியல் ஆண்களுக்கு பிடித்தமானதாக இருக்கின்றது.
ஆதிரை கரிகாலனை திருமணம் செய்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த இந்த சீரியலில் தற்போது, பாட்டி பட்டம்மாவின் ஷேர் குறித்து பிரச்சினை சென்று கொண்டிருந்தது.
பாட்டியின் ஷேர்காக ஜீவானந்தம், குணசேகரன், ஜனனி என போராடிய நிலையில், ஜீவானந்தம் சொத்தை கைப்பற்றியுள்ளார்.
குணசேரகன் என்றால் வீட்டில் அனைவரும் பயந்து கொண்டிருந்த நிலையில், தற்போது மருமகள்கள் அனைவரும் எதிர்த்து பேசி வருகின்றனர். தர்ஷினியும், ஐஸ்வர்யாவும் குலை உயர்த்தி பேசி வருகின்றனர்.
இவை அனைத்தையும் சொத்துக்காக மௌனம் காத்து வருகின்றார் குணசேகரன். ஆனால் ஜீவானந்தம் திட்டம் போட்டதை போல் அப்பத்தாவின் 40% சொத்து அவன் பெயருக்கு மாறி விடுகிறது.
பரபரப்பான ப்ரொமோ
தற்போது வெளியாகியுள்ள ப்ரொமோ காட்சியில், குணசேகரனின் ஆடிட்டர் சொத்து முழுவதும் போச்சு என்கிறான். இதனை கேட்டு கடுப்பான குணசேகரன், ஏன் சொத்து முழுசையும் அரசாங்கம் சீல் வச்சுட்டாங்களா? என கேட்கிறான்.
இல்லை ஜீவானந்தம்ன்னு ஒரு ஆளு சொத்து முழுசையும் எடுத்துக்கிட்டாரு என சொல்கிறான். இதனைக்கேட்டு குணசேகரன், கதிர் அதிர்ச்சியடைகின்றனர்.
இந்த நிலையில் அதைத்தொடர்ந்து ஜனனி, குணசேகரனால் ஜெயிக்கவே முடியாது. இன்னைக்கு அந்த ஆளா, நானா என்று பார்த்திடலாம் என்று ஈஸ்வரியிடம் சொல்கிறார்.
இந்த நிலையில் அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். எப்படி சொத்தை மீட்க போகிறார். அதே நேரத்தில் குணசேகரனும் துணையாக இருப்பாரா? அல்லது குணசேகரன் இன்னொரு பக்கம் நின்று ஜனனிக்கு பிரச்சனை கொடுப்பாரா? என்ற கேள்வி மக்களிடையே எழுந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |