முன்னாள் காதலியை கண்டு கண்கலங்கிய ஜீவானந்தம்... எதிர்பாராத திருப்பங்களுடன் நகரும் சீரியல்
எதிர்நீச்சல் தொடர் தற்போது விறுவிறுவிப்புக்கு பஞ்சம் இல்லாத அளவிற்கு சென்றுக் கொண்டிருக்கிறது. அந்தவகையில் இன்று வெளியானப் ப்ரோமோவில் மறைந்திருக்கும் காதல் கதை ஒன்று உள்ளது.
எதிர்நீச்சல் சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல் இப்போது விறுவிறுப்பான கதைக்களத்துடன் வேற லெவலில் நகர்ந்து கொண்டிருக்கிறது.
இந்த சீரியல் முழுக்க முழுக்க பெண்களை மையப்படுத்தி தான் இந்த கதைக்களம் நகர்ந்துக் கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் கனிகா, மாரிமுத்து, சத்தியப்பிரியா, பிரியதர்ஷினி, ஹரிப்பிரியா, சபரி பிரசாந்த், மதுமிதா, என ஒரு பெரிய பட்டாளமே தங்களுக்கு கொடுத்த கேரக்டரில் தொடர்ந்து சிறப்பாக நடித்து வருகிறார்கள்.
இந்த சீரியல் தான் தற்போது மற்ற சீரியல்களோடு போட்டிப் போட்டு கொண்டிருக்கிறது.
காதலால் கதறும் ஜீவானந்தம்
இந்நிலையில், இன்றைய தினத்திற்கான ப்ரோமோவில்,
ஜனனியிடம் தொடர்ந்து வம்பு செய்துக் கொண்டிருக்கிறார் கதிர். அதற்கு கொஞ்சம் கூட சலைக்காமல் நந்தினியும் அவர்களுடன் மோத ஆரம்பித்திருக்கிறார்.
இது பக்கம் சென்றாலும் மற்றொரு பக்கம் ஈஸ்வரி ஜீவானத்தத்தை சத்தித்து கோவமாக பேசும் போது ஜீவானந்தனின் முன்னாள் காதலி ஈஸ்வரி என்பது தெரியவருகிறது. சொத்து பறித்த விடயத்தில் கோபத்தில் இருந்த ஈஸ்வரி அது பற்றி கோவமாக கேட்க “என் ஈஸ்வரிக்கு இப்படி கோவமே வராது” என கூறி அழுகையுடன் திரும்பிச் செல்கிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |