எதிர்நீச்சல் சீரியல் எஸ். கே. ஆர் நிஜ வாழ்க்கையில் என்ன செய்கிறார் தெரியுமா?
“எதிர்நீச்சல்” சீரியலில் வில்லனாக நடித்து வரும் எஸ். கே. ஆர் பற்றி ஒரு சுவாரஸ்யமான தகவல் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
எதிர்நீச்சல் சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சக்கைப்போடு போடும் சீரியல்களில் ஒன்று தான் எதிர்நீச்சல்.
தற்போது சினிமாவிற்கு உள்ள ஆதரவை விட சின்னத்திரைக்கு பலத்த ஆதரவு கிடைத்து வருகின்றது.
மேலும் வாரத்திற்கு 5 நாட்கள் மாத்திரம் ஒளிபரப்படும் சீரியல்கள் தற்போது வாரத்திற்கு 7 நாட்களும் ஒளிப்பரப்படுகின்றது.
அந்த வகையில் பட்டிதொட்டியெங்கும் பிரபலமாகி டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தில் ஒடிக் கொண்டிருக்கும் எதிர்நீச்சல் சீரியலை திருச்செல்வம் இயக்கி வருகிறார்.
யார் இந்த எஸ். கே. ஆர் ?
இந்த நிலையில் எதிர்நீச்சல் சீரியலில் மாரிமுத்து உட்பட பல சினிமா பிரபலங்கள், சின்னத்திரை பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்கள்.
எதிர்நீச்சல் சீரியல் ஆதி குணசேகரனுக்கே டஃப் கொடுக்கும் வில்லன் என்றால் அது எஸ்.கே.ஆர் தான். இந்த கதாபாத்திரத்தில் கலக்கி வரும் வாசுதேவன் உண்மையில் யார் தெரியுமா?
வாசுதேவன் ஒரு பிசினஸ்மேன், இவர் கேரளாவை சேர்ந்தவர், தன்னுடைய பிசினஸில் நிறைய சம்பாதித்தாலும், தனக்குள் இருக்கும் நடிப்புத்திறமையை வெளிகாட்ட வேண்டும் என்பதற்காக இந்த சீரியல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறாராம்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த இணையவாசிகள், “ அட இவர உண்மையில் ஒரு பிஸ்னஸ்மேனா?” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |