சொத்து பறிபோன கவலையே இல்லாம இப்படியா பண்றது: வைரலாகும் ஜனனியின் வீடியோ
எதிர்நீச்சல் சீரியலில் ஜனனியாக நடித்து வரும் மதுமிதா தற்போது ட்ரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய வீடியோ அதிகம் வைரலாகி வருகின்றது.
எதிர்நீச்சல் ஜனனி
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல் இப்போது விறுவிறுப்பான கதைக்களத்துடன் வேற லெவலில் நகர்ந்து கொண்டிருக்கிறது.
இந்த சீரியல் முழுக்க முழுக்க பெண்களை மையப்படுத்தி எடுத்திருக்கிறார் இயக்குனர் திருச்செல்வம். இந்த சீரியலின் நாயகியாகவும் ஆதிகுணசேகரனின் வீட்டு கடைசி மருமகளாகவும் நடித்துவருபவர்தான் ஜனனி என்கிற மதுமிதா.
இந்த சீரியலில் இவரின் நடிப்பு ரசிகர்களை வெறித்தனமான மாற்றங்களைக் கொண்டு வந்திருக்கிறது சொல்லப்போனால் இவரால் தான் இந்த சீரியலில் பெண்கள் எல்லோரும் விழிந்துக் கொண்டது போல மாறி வேற லெவலில் உச்சத்திற்கு கொண்டுப் போய்க் கொண்டிருக்கிறார்கள்.
வைரல் வீடியோ
இந்நிலையில், ஜனனி தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றைப் பதிவிட்டிருந்தார்.
அந்த வீடியோவில் தற்போது வைரலாகி வரும் ஜெயிலர் திரைப்பட பாடலான காவாலா பாடலுக்கு அழகான ஆடையணித்து நடனமாடி வீடியோ வெளியிட்டிருந்தார்.
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அங்க சொத்து போச்சின்னு கவலைல இருக்கும் போது இப்படியா பண்றது என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |