புதிய காருடன் சென்ற ஜனனியிடம் வம்பிழுத்த நந்தினியின் கணவர்: வைரலாகும் வீடியோ காட்சி
எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கும் ஜனனி நேற்று முன்தினம் புதிய கார் ஒன்றை வாங்கியிருந்தார். அந்தக் காரை பார்த்து விட்டு ஜனனியுடன் சண்டைக்கு நிற்கும் வீடியோ காட்சி தற்போது வைரலாகி வருகின்றது.
எதிர்நீச்சல் சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல் இப்போது விறுவிறுப்பான கதைக்களத்துடன் வேற லெவலில் நகர்ந்து கொண்டிருக்கிறது.
இந்த சீரியல் முழுக்க முழுக்க பெண்களை மையப்படுத்தி தான் இந்த கதைக்களம் நகர்ந்துக் கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் கனிகா, மாரிமுத்து, சத்தியப்பிரியா, பிரியதர்ஷினி, ஹரிப்பிரியா, சபரி பிரசாந்த், மதுமிதா, என ஒரு பெரிய பட்டாளமே தங்களுக்கு கொடுத்த கேரக்டரில் தொடர்ந்து சிறப்பாக நடித்து வருகிறார்கள்.
எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கும் அனைவரின் நடிப்பு கொஞ்சம் வெகுளியாகவும் கொஞ்சம் கொஞ்சலாகவும் நகைச்சுவையாகவும் மிரட்டலாகவும் நடித்து சீரியலை உச்சத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார்கள்.
ஜனனியுடன் வம்பிழுக்கும் கதிர்
இந்த சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் ஜனனி என்கிற மதுமிதா நேற்றுமுன்தினம் புதிய கார் ஒன்றை வாங்கியிருக்கிறார்.
இவர் வாங்கிய காருக்கு பூஜை எல்லாம் போட்டு முடித்து சீரியல் சூட்டிங் ஸ்பாட்டிற்கு சென்றிருக்கிறார் போல அப்போது அங்கு வந்த கதிர் ஜனனியுடன் ரீல் வீடியோ செய்து வம்பிழுத்திக்கிறார்.
அதில் வடிவேலுவின் புல்லட்டை வைத்து செய்த நகைச்சுவை வீடியோவை இவர்கள் புதிய காரை வைத்து செய்திருக்கிறார்கள். இந்த வீடியோவை இவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |
