காண வந்த ரசிகர்களுக்கு சோறு போட்ட சிம்பு- வெளியான தகவல்
காண வந்த ரசிகர்களுக்கு சிம்பு உணவு கொடுத்த தகவல் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகர் சிம்பு
தமிழ் சினிமாவில் பன்முக திறமை வாய்ந்த நடிகராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்குள் நுழைந்த இவர் நடிப்பு மட்டுமல்லாது பாடுவது, பாடல் வரிகள் எழுதுவது, இயக்குவது போன்ற பல திறமைகளை கற்ற சகலகலா வல்லவர்.
இடைப்பட்ட காலத்தில் படங்கள் சரியாக ஓடாமல் இருந்து வந்த இவருக்கு மீண்டும் சிறந்ததொரு கம்பேக் கொடுத்த படம் 'மாநாடு'. தனது பாடி ட்ரான்ஸ்ஃபர்மேஷன் மூலமாக அனைவரையும் அசர வைத்தார் நடிகர் சிம்பு.
‘வெந்து தணிந்தது காடு’ படம்
சமீபத்தில் கவுதம் மேனன் இயக்கத்தில், நடிகர் சிம்பு நடிப்பில் 'வெந்து தணிந்தது காடு' படம் வெளியானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
‘பத்து தல’ படம்
இப்படத்திற்கு பிறகு சிம்பு நடிப்பில் வெளியாக உள்ள படம் ‘பத்து தல’. இப்படத்தில் கவுதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர். வரும் 30ம் தேதி இப்படம் வெளியாக உள்ளது.
ரசிகர்களுக்கு சோறு போட்ட சிம்பு
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் சிம்பு புது ஹேர் ஸ்டைலில் மேடையில் மாஸா நடனமாடினார். இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வந்தது.
இந்த இசை வெளியீட்டு விழாவில், எந்த ஹீரோக்களும் செய்யாத ஒரு விஷயத்தை நடிகர் சிம்பு செய்தார். இசை வெளியீட்டு விழாவில் கலந்துக்கொண்ட அனைத்து ரசிகர்களுக்கு அவர் உணவு வழங்கினார்.
தற்போது இத்தகவல் வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்கள் மேல் சிம்பு இவ்வளவு மதிப்பு வைத்துள்ளாரே என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
இது பற்றி தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறுகையில், இந்த ஐடியாவை சிம்புதான் கொடுத்தார் என்று தெரிவித்துள்ளார்.