குடும்பமே அல்லோலப்படும் வேளையில் முன்னாள் காதலனுடன் டூயட் பாடும் ஜனனி... ஏமாற்றத்தில் சக்தி
எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கும் ஜனனியும் அவரின் முன்னாள் காதலனும் ஒன்றாக இருந்து டூயட் பாடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
எதிர்நீச்சல் சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் சீரியல் இப்போது விறுவிறுப்பான கதைக்களத்துடன் வேற லெவலில் நகர்ந்து கொண்டிருக்கிறது.
இந்த சீரியல் முழுக்க முழுக்க பெண்களை மையப்படுத்தி எடுத்திருக்கிறார் இயக்குனர் திருச்செல்வம்.
இந்த சீரியலில் அனைவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரத்தில் அசத்தலான நடிப்பைக் கொடுத்து இந்த சீரியலை உச்சத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார்.
காதலனுடன் டூயட்
இந்நிலையில், இணையத்தில் ஒரு வீடியோ அதிகம் வைரலாகி வருகின்றது. அதில் ஜனனியை ஒருதலையாக காதலித்த கௌதமும் ஜனனியும் புதிய காதலர்கள் போல டூயட் பாடிக்கொண்டிருக்கிறார்கள்.
இந்த வீடியோவைப் பார்த்த அங்க குடும்பம் குணசேகரனிடம் மாட்டிக் கொண்டிருக்கின்ற நேரம் இது தேவையா அதுவும் சக்தியும் பாவம் தானே என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |