அம்மா முகமூடியுடன் விருது! ஒற்றை கேள்வியால் முழு அரங்கையும் அழ வைத்த அர்ச்சனா
விருது விழாவில் பிரபல தொகுப்பாளினி அர்ச்சனா மேடையில் கேட்ட ஒற்றை கேள்வியால் அரங்கமே கண்ணீரில் மூழ்கியது. குறித்த நெகிழ்ச்சியான தருணம் அடங்கிய காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ஜீ தமிழ் குடும்ப விருதுகள்
தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றாக விளங்கும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் என அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகின்றது.
ஜீ தமிழ் குடும்பத்தில் பணியாற்றி வரும் நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவரது திறமைகளையும் ஊக்குவிக்கும் வகையில் ஜீ தமிழ் நிறுவனம் ஒவ்வொரு வருடமும் ஜீ குடும்ப விருதுகள் என்ற பெயரில் விருது விழாவை நடத்தி வருகிறது.
அந்த வகையில் 2025ஆம் ஆண்டுக்கான விருதுகள் அண்மையில் வழங்கப்பட்டது. அதன் போது Best Entertainer of the Year விருது அர்ச்சனாவுக்கு வழங்கப்பட்டது.
கண்ணீரில் மூழ்கிய அரங்கம்
அர்ச்சனாவின் அம்மா அண்மையில் உயிரிழந்திருந்த நிலையில், அவருடைய அம்மாவின் முடிமூடியை போட்டுக்கொண்ட சிறுமிகள் இந்த விருதை அர்ச்சனாவுக்கு வழங்கினார்கள்.
அம்மா மீது அளவு கடந்த பாசத்தை வைத்திருந்த அர்ச்சனாவுக்கு இந்த தருணம் மிகவும் வேதனையை கொடுத்தது. இதன்போது தொகுப்பாளர் விஜய்யை பார்த்து அர்ச்சனா கேட்ட ஒரு கேள்வியால் முழு அரங்கமும் கண்ணீரில் மூழ்கியது.
குறித்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருவதுடன், ரசிகர்கள் பலரும் அர்சனாவுக்கு ஆறுதல் கூறும் வகையில் கமெண்டுகளை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |